தமிழ் – முஸ்லிம் மக்களின் ஜனாதிபதி பொது வேட்பாளராக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனை தெரிவு செய்வது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் நான்காம் திகதி முதல் ஆறாம் திகதி வரையில் வவுனியாவில் நடைபெறவுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட உள்ளது.
யாரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுபான்மை கட்சிகளின் பொது வேட்பாளராக சீ.வீ.விக்னேஸ்வரனை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும், பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பதா அல்லது ஏதேனும் ஓர் கட்சிக்கு ஆதரவளிப்பதா என்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.
இந்திய விஜயத்தின் பின்னர் பொது வேட்பாளர் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.