இந்திய பிரதமர் நரேந்திர மோடியைப் பயன்படுத்தி, வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
நரேந்திர மோடியைப் பயன்படுத்தி வடக்கின் 15 படையணிகளை விலக்கிக்கொள்ள முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் 5000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் படையினருக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தன், இந்தியப் பிரதமரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கிண்ணியா வெந்நீர் ஊற்று பகுதியையும் அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார்.