தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைப் போன்றே அவர்களின் பிரச்சாரப் போராட்டமும் வலுவானது என பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டொக்டர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார். ஆயுதப் போராட்டம் எவ்வாறு முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டதோ அதே தீவிரம் புலிகளுக்கு எதிரான பிரச்சாரப் போராட்டத்திலும் காண்பிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே முனைப்பு அதே தந்திரோபாங்களைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரப் போராட்டத்தையும் முறியடிக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஊடகங்களின் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரத்தை சாதாரண விடயமாக கருதப்பட முடியாது எனவும் அதுவும் ஓர் யுத்தமேயாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சார யுத்தத்தின் பாரதூரத் தன்மையை புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். சமூக ஊடக வலையமைப்புக்கள், ஏனைய ஊடகங்களைப் பயன்படுத்தி பிச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பணச் சலவை மற்றும் சட்டவிரோத பணக்கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கம்ப்யூட்டர் DATA க்களை , ஒன்றை ஒன்று மாற்றி கொள்ளும்படி ஒரு ப்ரோக்ராம் செய்து, இலங்கை SERVER ரில் ஓட விட்டால், ஒரு நாட்டின் மொத்த அரசாங்கமே கவிழ்த்து விடும் ! உங்கள் ஷேர் மார்க்கெட் முதல் ஏர்போர்ட் வரை அனைத்தும் செயல் இழக்கும். அப்படி பட்ட ஒரு microwave bomb அமெரிக்காவிடம் உள்ளது. அப்படி செய்து அனுப்பினாலும், புலிகளின் போர் தொடரும், நாட்டில் இல்லாமலும் …… இதற்க்கு ஒரு வழி, சுதந்திர தமிழ் ஈழம் !