இலங்கைக்கு எதிராக நோர்வே அரசாங்கம் வாய் திறக்க வேண்டிய தருணம் – நோர்வே பத்திரிகை

Verdens_Gang_logoஇலங்கைக்கு எதிராக நோர்வை அரசாங்கம் வாய்த்திறக்க வேண்டிய தருணம் வந்திருப்பதாக நோர்வேயில் வெளியாகும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

யுத்த காலத்தில் இலங்கை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நோர்வே அரசாங்கம் நேரடி தொடர்புகளை கொண்டிருந்தது.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும், இலங்கை மக்களின் நலன் தொடர்பில் நோர்வே அரசாங்கத்துக்கு அக்கறை இருக்குமாக இருந்தால், இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட வன்செயல்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் நோர்வை அரசாங்கம் தற்போது வாய்த்திருக்க வேண்டும்.

மகிந்தராஜஷவின் சர்வதேசத்துக்கு எதிரான பிடிவாதத்தை நோர்வே தமது அமைதியின் மூலம் மேலும் வளரவிடக்கூடாது என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கத்தை அந்த பத்திரிகை வடகொரியாவுக்கு ஒப்பான நாடு என்றும் குறிப்பிட்டுள்ளது.

TAGS: