தமிழ் மக்களுக்கு என்று ஒரு நிகழ்ச்சி நிரலை வைக்காது, வெறுமனவே நியுடெல்லி கூறுகின்ற கருத்துக்களுக்கு இணங்கி, கேள்விகள் எதுவும் எழுப்பாமல் செயற்படுவது. கூட்டமைப்பு நியூடெல்லியின் எடுபிடியாக மட்டுமே செயற்படுகிறதே தவிர தமிழ் மக்களின் நலன்களை மையப்படுத்தி எந்தவொரு செயற்பாடுகளையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு சாட்சியம் அளிக்கும் மாதிரிப்படிவங்களை வெளியிட்டு வைக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடயவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்ளை வழங்கியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் கேள்வி: தமிழ் தேசிய நாடாளுமன்றக் குழு டில்லி சென்று வந்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இணையத்தளம் ஒன்று வழங்கிய செவ்வியில் புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட வேண்டும். மோடி அவ்வாறு தன்னிடம் கூறிவிட்டதாகவும் கூறிய கருத்துத் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது?
கஜேந்திரகுமார் பதில்: திரு.சம்பந்தன் ஐயா மட்டும் அல்ல, பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்த கூட்டமைப்பின் குழுவில் உள்ளடங்கிய வேறு நபர்களும் பல்வேறு கருத்துக்களைக் கூறியிருக்கின்றார்கள். எடுத்துக்காட்டாக பிரதமர் மோடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தோடு நூற்றுக்கு நூறு வீதம் ஒத்துப்போவதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதற்கு மேலதிகமாக திரு.சம்பந்தன் அவர்கள் புலம்பெயர்ந்த மக்கள் சம்மந்தமாக நீங்கள் கூறிய கருத்தையும் கூறியிருக்கின்றார்.
பிரதமர் மோடி கூட்டமைப்பின் கருத்தோடு நூற்றுக்கு நூறு வீதம் ஒத்துப்போகின்றார் என்ற செய்தியில் நாம் ஆச்சரியப்பட வேண்டிய தேவை ஒன்றும் இல்லை. காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியுடெல்லியின் விருப்பத்திற்கு ஏற்பதான் அவர்களின் அத்தனை செயற்பாடுகளும், கருத்துக்ளும் அமைந்திருக்கின்றன. அதனுடைய இன்னொடு வெளிப்பாடுதான் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் செயற்பாடுகளை முடக்குகின்ற நோக்கோடு கருத்துக்கள் தெரிவிக்கின்றன.
நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு முக்கிய காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு என்று ஒரு நிகழ்ச்சி நிரலை வைக்காது, வெறுமனவே நியுடெல்லி கூறுகின்ற கருத்துக்களுக்கு இணங்கி, கேள்விகள் எதுவும் எழுப்பாமல் செயற்படுவது.
எம்மைப் பொறுத்தவரையில், இந்திய மத்திய அரசோடு முரண்பட்டு அவர்களை எதிரிகளாகப் பார்க்கக் கூடாது. அதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். அதே சமயம் எங்களின் (தமிழர்களின்) நலன்களில் இருந்துகொண்டுதான் யாருடனும் அணுக வேண்டும் அல்லது யாருடனும் பேரம் பேச வேண்டும்.
ஏனையவர்களின் கருத்துக்களுக்கு இணங்கிச் செயற்படுவது அவர்களின் நலன்கள் தான் பூர்த்தி செய்யபடுமே தவிர எங்களின் நலன்கள் பூர்த்தி அடையப்போவதில்லை.
எங்களைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஜயம் முக்கிய விஜயமாக அமைந்திருக்கலாம். உண்மையில் தமிழ் மக்களுக்கு நன்மை கொடுக்கக்கூடிய வகையில் அந்த விஜயம் பாவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அப்படி இல்லாமல் வெறுமனவே இந்தியா விரும்பினதை ஏற்று, இந்தியாவின் விருப்பத்தை ஏற்று, அதை தமிழ் மக்கள் மீது திணிக்கின்ற வேலைத் திட்டத்தை கூட்டமைப்பு நடந்துகொள்வதுதான் மிகவும் துர்ரதிஸ்டமான விடயமாக அமைந்திருக்கிறது மட்டுமல்ல கடுமையான ஒரு ஏமாற்றத்தையும் அளித்திருக்கிறது. இந்த உண்மையின் உரிய விளைவுகள் எதிர்காலத்தில் எம்முடைய மக்கள் நன்கு அறிவார்கள்.
ஊடகவியலாளர் கேள்வி: இரா.சந்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினருடன் நடத்திய பேச்சின் போது, வெளியே அரச தரப்பைச் சார்ந்த கட்சிகள் தவிர்ந்த வெளியே இருக்கின்ற கட்சிகள், அதாவது தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுவான அரசியல் தீர்வுக்கான முன்மொழிவை வைக்குமாறு மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை இரா.சம்பந்தன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று கூறாது புலிமக்களைக் கூறுவதாக ஒரு கதையைக் கூறியுள்ளார். இவ்வாறு ஏதாவது முயற்சிகள் நடந்துள்ளனவா? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொது இணக்கப்பாட்டை ஏற்றுச் செயற்பட டெல்லியின் ஏற்பாட்டில் ஏதாவது முயற்சிகள் இடம்பெற்றிருந்தனவா?
கஜேந்திரகுமார் பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த பலர் நீண்ட காலமாக எங்களுடைய பல கட்சி உறுப்பினர்களை அணுகியிருக்கிறார்கள். குறிப்பாக நாங்கள் ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நாங்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றோம். ஒன்றுபடுவதால் எங்களுக்கு ஒரு பிரச்சினையும் வரப்போவதில்லை. ஆனால் கொள்கை ரீதியாக நாங்கள் இணங்கலாம் என்றால் நீங்கள் கேட்கத் தேவையில்லை நாங்களே வந்து இணைவோம். அல்லது நீங்களே எங்களுடன் வந்து இணையலாம் என்று. நாங்கள் கொள்கை விடயத்தில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். அதுதான் நாங்கள் பிரிந்தமைக்குக் காரணம். அதில் ஒரு இணக்கப்பாடு இல்லாமல் இதைப்பற்றிப் பேசிப் பிரயோசனம் இல்லை என்ற கருத்தைத் தெரிவித்த போது, அவர்கள் ஒவ்வொருவரும் கொள்கையை விட்டு விட்டு வாருங்கள் என்றுதான் இதுவரைக்கு கூறியிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட நிலையில் இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் எந்தவித கருத்துக்களையும் கூறியிருப்பதாக நாங்கள் இதுவரை அறியவில்லை. அப்படி இருந்தாலும் கூட நாங்கள் கொள்கை விடயத்தில் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.
கூட்டபைப்பு தொடர்பில் இன்னொரு விடயத்தை முன்வைக் வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேறு தரப்பினரும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள். ஐ.நா விசாரணை தொடர்பிலான எந்தவொரு கருத்தையும் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை. இந்தியத் தரப்பும் அதுதொடர்பி;ல் எதுவும் தெரிவிக்கவில்லை.
பின்னணி என்னவென்றால் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த பொழுது இந்தியா அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தரவில்லை. அத்தீர்மானத்தை எதிர்க்காமல் இருந்து மிகப்பெரிய தவறு என மோடி அரசாங்கம் கூறுகிறது. குறிப்பாக இலங்கைத் தீவில் நீதி விசாரணையை கொண்டுவருதற்கான தீர்மானத்தை வெறுமனவே கலந்கொள்ளாது அதனை முழுமையாக எதிர்த்திருக்க வேண்டும் என்ற கருத்தை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இன்றைக்கு ஒக்டோபர் 30ஆம் திகதி வரைக்கும் எமது மக்கள் சாட்சியம் அளிக்கும் காலத்தில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அந்தவொரு காலப்பகுதியில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஜயமும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது. தமிழனைப் பொறுத்தவரையில் இந்த விசாரணை முக்கியமானதாக அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் விசாரணையை எதிர்க்கின்ற ஒரு நாடாக இந்தியா இருக்கின்ற போது, ஒரு பிரதமரைச் சந்திக்கின்ற நிலையில் இந்தியாவின் அந்த நிலைப்பாடு தொடர்பில் எந்தவொரு வார்த்தையையும் பேசாது இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைபின் உண்மையான நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. கூட்டமைப்பு நியூடெல்லியின் எடுபிடியாக மட்டுமே செயற்படுகிறதே தவிர தமிழ் மக்களின் நலன்களை மையப்படுத்தி எந்தவொரு செயற்பாடுகளையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நமக்குள் ஒற்றுமை மிக3 அவசியம். அது இன்மையினாலேயே ஈழம் அமைவதை இழந்தோம். இன்னுமா …?!