முக்ரிஸ்: மகாதிருக்குத் தலைவர்கள்மீது அளவில்லா அன்பு அதனால்தான் குறைகூறுகிறார்

mukrizமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  பிரதமர்  நஜிப்பைக்  குறைகூறுகிறார்  என்றால்  அதற்கு  இப்போதுள்ள  தலைவர்களை  அவர்  மிகவும்  நேசிப்பதே  காரணம்.

மகாதிரின்  குறைகூறல்கள்  நாடு  எதிர்நோக்கும்  பல்வேறு  சவால்களையும்  எதிர்கொள்ள  நஜிப்புக்கு  ஊக்கமளிக்கும்  நோக்கம்  கொண்டவை  என்கிறார்  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிர்.

“அன்பினால்தான்  என்  தந்தை  துன்  மகாதிர்  குறைகூறுகிறார்  என்பதைச்  சொல்லிக்கொள்ள  விரும்புகிறேன்.. அது டத்தோ  ஸ்ரீ(நஜிப்)க்கு  ஊக்கம்  கொடுக்கும்  நோக்கம்  கொண்டது. .டத்தோ ஸ்ரீக்கும்  இது  தெரியும் என்றே  நம்புகிறேன்”, என்றாரவர்.

இன்று, ஜெர்லுன்  அம்னோ  பேராளர்  கூட்டத்தை  நஜிப்  தொடக்கிவைத்த  நிகழ்வில்  உரையாற்றியபோது  முக்ரிஸ்  இவ்வாறு  கூறினார்.