வடக்கில் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தும் மேற்குலக நாடுகளின் ராஜதந்திரிகள்!

uk-johnமேற்குலக நாடுகளின் ராஜதந்திரிகள் வடக்கில் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேற்குலக நாடுகளின் ராஜதந்திர அதிகாரிகள் வட பகுதிக்கு இரகசிய விஜயங்களை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு இரகசிய விஜயங்களை மேற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதி தூதுவர் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகள் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

அமெரிக்க தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணம் கைதடியில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

எனினும், இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரண்டு மாகாணசபை உறுப்பினர்களும் பங்கேற்றிருந்த காரணத்தினால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

வட மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரனுடன் இந்தப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அண்மைய நாட்களாக மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் அதிகளவில் வடக்கிற்கு விஜயங்களை மேற்கொள்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவின் விசாரணைகளுக்கு உதவும் வகையில் இவர்களின் விஜயங்கள் அமைந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்யுள்ளனர்.

இரகசியமான முறையில் சாட்சியங்கள் திரட்டப்பட்டு ஜெனீவாவிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

பிரிட்டன், ஜேர்மன், அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்குலக நாடுகளின் ராஜதந்திரிகள் அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள், சர்வதேச விசாரணையை ஓரங்கட்டும்: ஜப்பான் நம்பிக்கை

japan_pm_Shinzo Abe_001இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள், சர்வதேச விசாரணையை ஓரங்கட்டும் என ஜப்பான் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விஸ்தரிப்பு போன்ற நடவடிக்கைகள், ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைகள் தொடர்பான விடயத்தை செயலிழக்கச் செய்யும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே இலங்கையின் செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய மின்னஞ்சல் செவ்வியில் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான சர்வதேச போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நேரடி கேள்வியை ஜப்பான் பிரதமர் தவிர்த்துள்ளார்.

இலங்கை அரசாங்கம், தேசிய நல்லிணக்கத்துக்காக காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவை விஸ்தரித்துள்ளமை உட்பட தீர்க்கமான விடயங்களில் முனைப்பு காட்டுவதை தாம் அறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த முனைப்புகள் மூலம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை செயலிழக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்காக சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நம்பிக்கையை கட்டியெழுப்ப ஜப்பான் உதவிகளை தொடரும் என்றும் அபே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சமாதானத்துக்காக ஜப்பான் நீண்டகாலமாக செயற்பட்டு வருகிறது.

ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி இதற்காக பாரிய பணிகளை மேற்கொண்டுள்ளார் என்றும் அபே சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் அபேயும் அவரது பாரியார் அக்கி அபேயும் இன்று பகல் 12.45 அளவில் இலங்கைக்கு வருகை தருகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்கும் அவர் நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்வதுடன் நாளை முற்பகல் 9 மணிக்கு தமது பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.

1957 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய பிரதமராக இன்று விஜயம் மேற்கொள்ளும் அபேயின் பாட்டனார் நௌசுகி கேசி கருதப்படுகிறார்.

TAGS: