மரியாதைக்குறைவாக நடந்து கொண்டிருந்தால் மன்னிக்க வேண்டும் என பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தம் கட்சி சார்பில் சிலாங்கூர் சுல்தானிடம் இன்று மன்னிப்பு கேட்டார்.
சிலாங்கூர் அரசமைப்பையும் சுதந்திரத்திலிருந்து கடைப்பிடிக்கப்படும் நடைமுறையையும்தான் பிகேஆர் பின்பற்றியது என்றாரவர்.
“சிலாங்கூர் அரசமைப்பையும் 1957-இலிருந்து கடைப்பிடிக்கப்படும் நடைமுறையையும் பின்பற்றும் எங்கள் முடிவு சுல்தானின் உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்”, என்று அன்வார் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
இதற்குமுன்னர் , டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும் இதேபோன்றதொரு அறிக்கை விடுத்திருந்தார்.
யார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்? அப்படிஎன்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை இவர் அனுமதியுடன் தான் பதவியில் அமர்த்தமுடியுமா? அப்பேர்பட்ட பிரிட்டிஷ் அரசியே அரசியலில் தலை இடுவதில்லை ஆனால் இங்கு? என்னதான் இங்கு நடக்கின்றது?
செப்டெம்பர் 16ல் மத்திய ஆட்சியையே பிடிப்பதாக கூறி எங்கள் காதில் பூ சுத்தினீர். அதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை. சென்ற பொதுத்தேர்தலில் எம்.ஜி.ஆர். வேஷம் போட்டு ஆட்சியையே பிடிக்கப் போவதாக துள்ளிக் குதித்தீர், அடுத்து என்ன செய்யப் போக போகிறீரோ தெரியாது. ஆட்சியை பிடிக்கும்வரை உங்களை நான் விடப் போவதில்லை.
சிங்கத்துக்கு கொழுப்பு ஏறிக்கொண்டே போகிறது.
அப்ப காரியம் ஜெயமுன்னு அர்த்தம்தானே?
ஆசாமி அவர்களே! உண்மைதான். உடம்பில் கொழுப்பு ஏற ஏற, சில உண்மைகளை கக்க வேண்டியுள்ளது. பித்த உடம்பு., கொழுப்பு ஒத்துக்கல ஐயா!
அன்வார் சிங்கத்தின் சாப்பாட்டு தட்டில் மண்ணை அள்ளி போட்டு விட்டார் !!!!!!!!!
செப்டம்பர் 16 க்குள் சிறைக்கு சென்று விட போகிறார் அபங் அன்வர்…ஹா ஹா ஹா..
மாநில சுல்தானுக்கே மதிப்பு கொடுக்க தெரியாத நீயெல்லாம் எப்படி நாட்டை ஆள போகிறாய்..இதுல எம்.ஜி.ஆர் கெட்டப் வேற..
பதவி ஆசையில் 1998 ல் பாரிசனை உடைத்தார், 2014 ல் பக்கதானை உடைகிறார்.
மதிப்பு கொடுத்து வாங்குவது. கேட்டுப் பெறுவதல்ல!.
ஓகே கூட் லக் …
சுல்தானுக்கு 100 வருஷத்துக்கு ஒரு முறை தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதிலேயும் மண்ணைப் போடுகிறீர்களே! முடிவை அவரிடமே விட்டு விடுங்கள்!
அடிமை எல்லாம் கொக்கரிக்க கூடாது.சாந்தியை போன்ற கொத்தடிமைகள் வாயை பொத்திக்கொண்டு இருக்கும் படி அறிவுறுத்த விரும்புகிறேன்.
மன்னிக்க தெரிந்த மனிதரின் உள்ளம் மாணிக்க கோவிலடா…………
பாத்து …திரும்பவும் அன்வர் கோவில் மணியை பிடுங்கி விடுவேன் என்று மிரட்டபோகிறார்.
…..சட்டம் ஒரு இருட்டு அரை இந்த நாட்டுல ……கேட்ட்க ஆலுஇலை
அடியாத்தி சாந்தி நோக்கு ஒன்னு தெரியுமோ அன்வார் கோயில் மணியைத்தான் பிடுங்குவேன் என்றார் ..ஆனால் உங்க ஆளுங்க நூத்து கணக்கான நம்ம கோயில்களையே இருந்த இடம் தெரியாம பண்ணிட்டாய்களே, அது தெரியுமோ நோக்கு?