பிகேஆர், செப்டம்பர் 25-இல் நடைபெறும் பெங்காலான் குபோர் இடைத் தேர்தலில் பாஸ் போட்டியிட இடமளித்து ஒதுங்கிக் கொள்வதென முடிவு செய்துள்ளது.
“அம்னோவையும் பாரிசான் நேசனலையும் வெற்றிகரமாக எதிர்த்து நிற்க பக்கத்தான் ரக்யாட்டில் உள்ள நாம் ஒன்றுபட்டிருப்பது முக்கியம்”, என பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஓர் அறிக்கையில் கூறினார்.
நொம்ப பேசினார்கள் இல்லையா வெற்றி பெறுகிறார்கள என்று பார்ப்போம் ……………
கிளந்தான் மாநிலத்தில் அம்னோ வெல்லும் தொகுதிகள் வெகு சில. அதில் இந்த பெங்காளான் குபுரும் ஒன்று. ஆகக் கடைசியாக 1999 பொதுத்தேர்தலில் பாஸ் கட்சி இத்தொகுதியை வென்றது. அதற்கு பிறகு நடைப்பெற்ற மூன்று தேர்தல்களிலும் அம்நோவே இத்தொகுதியை கைப்பற்றியது. எப்பேர்பட்ட வேட்பாளரை போட்டாலும் இத்தொகுதியில் பாஸ் கட்சி வெல்வது சற்று கடினமே.
இதுதான் தலைவரின் சமயோசிதபுத்தி (விவேக புத்தி.)என்பது ! விட்டுகொடுத்து
வேடிக்கை பார்ப்பது!
விட்டுக் கொடுக்கவில்லை….பாஸ் கட்சிக்கு புத்தி வர ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி.யில் தோற்றால் தான் பாஸ் தலைமைக்கு புத்தி வரும். இத்தொகுதி.வாக்காளர்கள் நல்ல பாடம் புகட்டுவர்கள் என்று எதிர்பார்ப்போம்..
பாசுக்கு நெத்தி அடி!!!! விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லையே என்று பல்லிளித்துக்கொண்டு நகருவர் நயவஞ்சக தலைவர்கள்.
சிறந்த ராஜ தந்திரம் .வாழ்த்துக்கள் வான் அசிசா. பாவம் ஹாடி அவாங் .அவர் முகத்தில் அவரே பூசிக்கொண்டார் கரியை.
அட..விட்டுகொடுக்கரராம் …உன்னால் தான் இன்று மக்கள் கூட்டனி அல்லள் படுகிறது..முதலில் பதவி ஆசையை விட்டுகொடும்…
காகித புலி….