இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது, இந்திய பிரதிநிதி இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போர் குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்திய பிரதிநிதி அறிவித்துள்ளார்.
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் உள்ளக ரீதியான விசாரணைகளே நடத்தப்பட வேண்டும். அந்த விசாரணைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.
கடந்த அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தின் அடிப்படையில் புதிய ஆணையாளர் செயட் அல் ஹூசெய்ன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய பிரதிநிதி கோரியுள்ளதாக சிங்களப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது எதிர்பார்த்த ஒன்றுதான்.ஈழத்தில் கொல்லப்படுவது வட நாட்டை சேர்ந்தவன் அல்ல.தென்னக தமிழகத்தின் தொப்புள் உறவை கொண்டுள்ள தமிழன்.ஆகவே இயற்கையாகவே வடவர்களை அதிகமாக கொண்டுள்ள இந்திய பேரரசு ஒருகாலும் ஈழத் தமிழனுக்காக போராடப்போவதில்லை.இந்த பேரரசோடு ஒரு மாநிலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ் நாட்டான்கள் தினம் ஆளுக்கொரு பக்கமாக டில்லிக்கு காவடி தூக்கிக் கொண்டிருக்கும்வரை இந்த வடவனின் தமிழின எதிர்ப்புக் கொள்கை ஒருபோதும் மாறப் போவதில்லை.ஈழத் தமிழனுக்கும் விடிவுக் காலம் ஏற்படப் போவதில்லை.
நல்லது.தமிழர்களுக்கு தனி தமிழ் நாடு இருப்பதின் அவசியத்தை அவ்வபோது இந்தியா ஞாபகபடுத்துகிறது.
தனி தமிழர் ஒன்றே உலக தமிழர் நலனை காக்கும்!
வடக்கத்தியான் தமிழ் துரோகி சுப்ரமன்யஸ்வமியுடன் ஆதரவுடன் நம்முடைய உடன் பிறப்புகளுக்கு துரோகம் செய்து விட்டான்கள். மோடி பேச்செல்லாம் வாக்கு சேகரிக்கவே. இந்த ஈன ஜென்மங்கள் என்றைக்குமே உண்மையாக ஒன்றும் செய்ய முடியாது -சீனாவுக்கு பயந்து சிங்களவனுக்கு ஆதரவு தரும் கூறு கெட்ட அரசியல் வாதி – எனினும் நம் உடன் பிறப்புகள் கொல்லப்படும்போது தமிழ் நாட்டு தமிழர்கள் எதை பிடுங்கிகொண்டிருன்தனர்? முதுகெலும்பில்லா பிண்டங்கள்.தமிழ் திரைப்படங்களில் நாம் காணும் காட்சிகள் உண்மையாகத்தான் இருக்கவேண்டும், இருவர்கள் சண்டை போடும்போது ஆயிரக்கணக்கில் வேடிக்கை பார்க்கும் பிண்டங்கள் எப்படி நம் உடன்பிறப்புகள் கொல்லப்படும்போது உதவுவார்கள். அத்துடன் அகதிளாக தமிழகத்தில் உள்ள நம் உடன் பிறப்புகள் எவ்வாறு கவனிக்கப்படுகின்றனர்?