வவுனியாவில் அமெரிக்க இராணுவம் ? அதிரும் தகவல் !

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 27வ் ஆவது கூட்டத்தொடர், ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 26ம் திகதிவரை இது இடம்பெறவும் உள்ளது. இந்த கூட்டத்தொடரில், மனித உரிமை அலுவலகத்தால் முன்னெடுக்கப்படும் விசாரணை குறித்து வாய்மூல அறிக்கை சம்ர்பிக்கப்படவுள்ளது. இந்த 27வது கூட்டத்தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் தொடட்பாகவும், பல நாடுகளின் பூகோள கால மீளாய்வு நிலைமைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது. இதேவேளை அமெரிக்கா இலங்கை தொடர்பாக வாய்மூல அறிக்கை ஒன்றை சம்ர்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் இன்னும் மனித உரிமை நிலை மேம்படவில்லை என்ற கருத்திற்கு அமையவே இந்த வாய் மூல அறிக்கை இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது.

பலரும் அமெரிக்கா – இலங்கை நாடுகளுக்கு இடையே முறுகல் தோன்றியுள்ளதாக நினைத்துள்ளார்கள். மேலும் சிலர் அமெரிக்கா தமக்கு உதவும் என்றும் இன்னமும் நம்புகிறார்கள். அதிலும் சிலர் அமெரிக்கா இல்லாமல் தீர்வு இல்லை என்று எல்லாம் கருத்துச் சொல்கிறார்கள். ஆனால் வன்னியில் கிளிநொச்சி படைமுகாமில் அமெரிக்க இராணுவத்தினர் சிங்கள படைகளுக்கு, பல்வேறுபட்ட பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. குண்டுகளை மோப்பம் பிடித்து கண்டறியும் நாய்கள் தொடர்பாகவும், அவசர நிலையை சமாளிப்பது தொடர்பாகவும், திடீரென ஒரு தீவிரவாத தாக்குதல் இடம்பெற்றால் அதனை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பாகவும் பல பயிற்சிகள் சிங்கள இராணுவத்திற்கு அமெரிக்காவால் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு இனப் படுகொலை புரிந்த இராணுவத்திற்கு இவ்வாறான உதவிகளை அமெரிக்கா ஏன் செய்யவேண்டும் ? ஒரு புறத்தில் ஐ.நாவில் பிரேரணை மறு முனையில் அதே இராணுவத்திற்கு பயிற்சி ? என்ன தான் நடக்கிறது ? தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளிவிடுவதில் அமெரிக்கா ஜகஜாலக் கில்லாடி என்று அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இதனை இங்கே பார்கக்கூடியதாகவும் உள்ளது.

புகைப்பட உதவி: இனியொரு.காம்

TAGS: