விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகரனின் புதல்வன் பாலசந்திரனின் கொலை தொடர்பில் விசாரணைகள் நடத்துவதாக சிறிலங்காவின் ஜானாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெறும் போது யார் யாரை சுட்டார்கள் என்பது சரியாக தெரியாது.
ஆனால் இதனை இராணுவத்தினர் மேற்கொண்டிருப்பார்கள் என்று நான் கருதவில்லை. இதன் பொருட்டே தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன.
விரைவில் உண்மை என்னவென்று தமக்கு தெரியவரும் என்று அவர் கூறியுள்ளார். அதேவேளை 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன பொக்கிஷமே ,உம் இதயம் துளைத்த இனவாதம் , உம்மை சாய்த்தவனும் ,இன்று பிணத்திற்கு சமமானவனே ,என்றும் உம் முகம் மறவா .விடுதலையை நோக்கி . [ மலரட்டும் தமிழ் ஈழம் ].
பாலசந்திரனே!
பால் மனம் மாறா
பாலகனே! இளங்குருத்தே.
உன் இள மார்பை கூட
துளைத்தெடுக்க எந்த
மிருகத்தின் உள்ளமடா
கல்லானது?ஈழத்தின்
நம்பிக்கை நட்சத்திரமே,உன்
தந்தையின் சுவாசக் காற்றும் நின்றதே.
இனி ஈழத்துக்கு ஏதடா சுதந்திர காற்று.
உன் மரணத்தின் மீது
குள்ளநரிகளின் விசாரணையா?
இதில் எங்கேயடா நீதி பிறக்கும்?
கொலைகாரனே கொலையை
விசாரிக்கும் கூத்து அந்த
சிங்கள தேசத்துக்கே உரியதடா.
வன்னியில் விளையாடி தந்தை சென்னியை அணைத்தாடி
வளர்ந்தனை செல்வ மகனே… – உந்தன்
பொன்னுடல் தரைசாய புகழ்முடி தமிழேந்த வாழ்கிறாய்
மன்னவன் ஈன்ற மகனே…
தென்னவர் புகழ்பாட தேன்தமிழ் உறவாட உதித்திடும் தமிழீழமே – அன்று
சின்னவர் பெரியவர் அனைவரின் விழியாட
உருவாகும் சிலையொன்று உனக்காகவே! தம்பி உனக்காகவே!
நன்றி :- திராவிடன்
பச்சாதாபம் பெற ;பாலச்சந்திரனை புலிகளே கொன்றதாகவும் செய்தி உள்ளது.. தொட்டதெற்கெல்லாம் இலங்கை இராணுவம் தானா ? புலிகளின் இருமாபபால் பல்லாயிரம் தமிழ் ; சிங்கள பாலச்சந்திரன் மடிந்த போது சும்மா இருந்த மூடர்களே..! உங்களுக்கு முதலில் வரட்டும் மரணம்…!அவர்களை இப்போதாவது வாழ விடுங்கள் ..