தமிழ் மக்களது போராட்டம் நியாயமானது! யாருமே அதை நிராகரிக்க முடியாது!! மாவை சேனாதிராஜா

Mavai-Senathirajahதமிழ் மக்களது போராட்டத்தை யாருமே நிராகரிக்க முடியாது என தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை.சேனாதிராஜா அவர்கள் கூறியுள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் கிளையில் மாவை சேனாதிராஜாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்று நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் ஊரையாற்றும் போது:

வடக்கு – கிழக்கு மக்களின் குடிப்பரம்பலை அழித்து விடவேண்டும் என்பதே அரசின் கடந்த ஐந்தாண்டு கால கூடுதலான எதிர்பார்ப்பாக இருக்கின்றது. போர் முடிவுற்று 5ஆண்டு காலப்பகுதியிலே அரசினால் அதிகளவான பிரச்சினைகள் எழுந்துள்ளதுடன் தமிழ் மக்களின் நிலத்தையும்,இனத்தையும் அழிக்கும் நடவடிக்கையே அரசு மேற்கொண்டு வருகின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அடுத்த முகங்களால் தமிழரசுக் கட்சிக்கு எதிராக கூக்குரல் கிளம்புகின்றது.புதிய இரத்தங்கள் கட்சிக்குள் உட்பாய்ச்சப்படுமானால் அதுவும் பொருத்தமானதாகவே  இருக்கும்.

நாம் எமது நிலங்களுக்கு நட்டஈடு கேட்கவில்லை.எமது நிலம் எமக்கே வேண்டும் என்றே கேட்கின்றோம்.ஆனால் அரசு தமிழர் வாழும் மண்ணில் சிங்களவர்களை அனுமதிக்கின்றனர்.இராணுவத்தை குடியேற்றுகின்றனர்.இவ்வாறான
செயல்களினால் தமிழினம் அழிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களது போராட்டத்தை யாருமே நிராகரிக்க முடியாது ஏனென்றால் நமது போராட்டத்தில் நியாயம்,நேர்மை உண்டு.அதனால் தான் சர்வதேசமே நம்பக்கம் ஆதரவாக இருக்கின்றது.எனவே தன்னாட்சியை நாம் நிலைநாட்ட வேண்டும்.ஆகவே தமிழ் மக்களை இன்னொரு அழிவுக்குள் கொண்டு செல்லாமல் தமிழ் மக்களின் நிலத்தையும்,இனத்தையும் பாதுகாக்க வேண்டும்.

மேலும் எனக்கு மாலை,பொன்னாடைகள் அணிவித்து வரவேற்பது முக்கியம் அல்ல எமது தமிழ் மக்கள் இரத்தத்தை எங்கள் மேலே சொறிந்தார்கள்  அதுதான் உண்மையான வரவேற்பு எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

TAGS: