வடமாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கள் பத்திரிகை ஒன்று இந்த செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.
அண்மையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம், தாம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திக்க விரும்புவதாக கோத்தபாய ராஜபக்ச கூறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து இது தொடர்பில் கருத்துரைத்திருந்த விக்னேஸ்வரன், தமக்கு இது தொடர்பில் நேரடியான அழைப்பு வரவில்லை. அத்துடன் அவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்டால் அது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று சிங்கள பத்திரிகையொன்றில், கோத்தபாயவை சந்திக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளதாக கட்சி தரப்புக்களை கோடிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.