இலங்கையில் உள்ள ஈழத்து தமிழர்களுக்கு மிக விரைவில் மோடி தலைமையில் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாக அவுஸ்திரேலியாவில் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடந்த பாரதி விழாவில் உரையாற்றிய போதே இந்தியா பாஜக தலைவர்களில் ஒருவரான இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி (BJP) இல. கணேசன் மற்றும் பாஜக குழு ஏசி முத்துக்கண்ணன் மற்றும் திரு கி.வீரமணி ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:
பாரதியின் நிகழ்வில் அரசியல் பேசுவது உகந்தது அல்ல எனத் தெரிவித்த அவர், பாரதியின் கவிதைகள் பாடல்களில் சொல்லப்பட்டது போல இலங்கையில் என்ன நடக்கும் என்பதை மிக தெளிவாக கூறியிருந்தார்.
பாரதியின் வரிகளிலே மிக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இலங்கை தீவில் நடைபெற்ற சம்பவங்கள் நடைபெறப் போகின்ற சம்பவங்கள் என பாரதி மிக நன்றாக அவரின் பாடல் வரிகளில் மிக தெட்டத் தெளிவாக கூறியிருக்கிறார்.
அது போன்று இலங்கையில் வாழும் எமது ஈழத் தமிழர்கள் வாழ்வில் மிக விரைவில் மாற்றங்கள் ஏற்படும்.
பிரதமர் மோடி தனது 30 வருடகால நண்பர், அவர் இந்த ஈழத் தமிழர்கள் விடயத்தில் தனது கவனத்தில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர் பண்பாட்டு கழகம் ஏற்ப்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுக்கு அவுஸ்திரேலியா வாழ் தமிழ் சிறுமியர்கள் பாரதியின் பாடல்களும் அவரின் கவிதைகள் என பல்வேறுபட்ட விடயங்களை மிகவும் சிறந்த முறையில் பங்கேற்று நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
என்ன சாரே கதை விடுகிறீர்களா?.நிறைய கேட்டு ஏமாந்து விட்டோம் .