“இலங்கை யுத்த இறுதிகட்டம் பற்றிய மூன்றாவது பார்வை”: புதிய அறிக்கை

இலங்கையின் இறுதிகட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் இலங்கை அரசோ, இது குறித்த விசாரணைகளை உள்நாட்டிலிலேயே நடைபெறுகின்றன என்றும், நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறுகிறது.

அரச விசாரணைக் குழுவினர்

இறுதிகட்டப் போர் குறித்து பன்னாட்டளவில் ஒரு அறிக்கையும், உள்நாட்டில் ஒரு அறிக்கையும் வெளியாகியுள்ள நிலையில், இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டு, அதிலுள்ள அம்சங்களை உள்ளடக்கி மூன்றாவது விரிவுரை எனும் தலைப்பில் ஒரு அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது.

கொழும்பிலுள்ள மார்கா ஆய்வு மையமும், இலங்கையில் செயல்படும் மனிதாபிமான உதவி நிறுவனங்களின் கூட்டமைப்பும் இணைந்து இந்த அறிக்கையை தயாரித்து, ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்திடமும் அளித்துள்ளன.

போரின் தாக்கம்

போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், இப்படியான ஒரு அறிக்கையை தயாரிக்க வேண்டிய அவசியம் என்னவென்று, அதை எழுதியவர்களில் ஒருவரான, இலங்கையில் பணியாற்றும் மனிதாபிமான உதவி நிறுவனங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஜீவன் தியாகராஜா பிபிசி தமிழோசையிடம் விளக்கினார். -BBC

இலங்கை யுத்த இறுதிக்கட்டம்! மூன்றாவது விரிவுரை! வெளியாகியுள்ள புதிய அறிக்கை

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் இலங்கை அரசோ, இது குறித்த விசாரணைகளை உள்நாட்டிலிலேயே நடைபெறுகின்றன என்றும், நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறுகிறது.

இறுதிகட்டப் போர் குறித்து பன்னாட்டளவில் ஒரு அறிக்கையும், உள்நாட்டில் ஒரு அறிக்கையும் வெளியாகியுள்ள நிலையில், இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டு, அதிலுள்ள அம்சங்களை உள்ளடக்கி மூன்றாவது விரிவுரை எனும் தலைப்பில் ஒரு அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது.

கொழும்பிலுள்ள மார்கா ஆய்வு மையமும், இலங்கையில் செயல்படும் மனிதாபிமான உதவி நிறுவனங்களின் கூட்டமைப்பும் இணைந்து இந்த அறிக்கையை தயாரித்து, ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்திடமும் அளித்துள்ளன.

போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், இப்படியான ஒரு அறிக்கையை தயாரிக்க வேண்டிய அவசியம் என்னவென்று, அதை எழுதியவர்களில் ஒருவரான, இலங்கையில் பணியாற்றும் மனிதாபிமான உதவி நிறுவனங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஜீவன் தியாகராஜா பிபிசியிடம் விளக்கினார்.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அரசாங்கப்படைகள் மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய இருதரப்பினரையும் நோக்கும் போது விடுதலைப்புலிகளே அதிகமான குற்றங்களைப் புரிந்துள்ளனர் என்பதுதெளிவாகின்றது. இதனையே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் கூறுகின்றது.

2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தரப்பினருடன் இணைந்து யுத்தத்தை நிறுத்தி பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் விடுதலைப்புலிகளே ஏற்றுக்கொள்ளாது குழப்பியடித்தனர்.

அரசாங்கம் போரில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுவதற்கு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் பயனற்றுப் போயின. மக்களை காப்பாற்றுவதென்றால் புலிகளை வேறாகவும் சிவிலியன்களை வேறாகவும் பிரிப்பதற்கு எவ்வளவோ முயன்றும் அது பலனளிக்கவில்லை.

எனவே போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கப்படைகளை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் மூன்றாவது அறிக்கையை தயாரித்து புத்தகமாக வெளியிட்டுள்ளவர்களில் ஒருவரான  ஜீவன் பிபிசியிடம் விளக்கியுள்ளார்.

அத்துடன் இவ்விவகாரம் தொடர்பில் உள்நாட்டில் ஒரு விசாரணையும் ஐநா குழு ஒரு விசாரணையும் நடைபெறுவதை நாம் விரும்பவில்லை என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TAGS: