ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையில் வெறித்தாண்டவமாடிய இராஜபக்சவின் கைகைளைப் பலப்படுத்தத் தமிழர்களின் உழைப்பை உறிஞ்சிக் குடித்த லைக்கா நிறுவனம் கங்கணம் கட்டிக் கொண்டு நின்றது. இன்னமும் நிற்கின்றது. இந்த நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனும் ஐங்கரன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் கரணாமூர்த்தியும் இணைந்தே இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் இரத்தக் கரங்களை மறைக்கப் பெரும் முயற்சியில் ஈடுபட்டள்ளார்கள். இதற்குப் பிரதி உபகாரமாக இவர்களிற்கான சிறீலங்காவின் வியாபராச் சந்தையையும் இனப்டுகொலை இராணுவத்தின் அங்கீகாரத்தையும் ராஜபக்ச வழங்கியுள்ளான்.
சுபாஸ்கரனும், கரணாமூர்த்தியும் பரிசைத் தளமாககக் கொண்ட மேலும் ஒரு வியாபாரப புள்ளியும் சிங்களத்திற்குக் காட்டும் விசுவாசத்திற்காக அவர்களின் அதிரடிப்படை உலங்குவானூர்தியிலேயே பயணம் செய்ய அனுமதிக்கும் அளவிற்குச் சிங்களத்தின் தோழர்கள் ஆக உருவாகி உள்ளார்கள். சிறீலங்காவின் தனித்த விசேட இராணுவ அணியின் பாதுகாப்புடனேயே சிங்கள அமைச்சர்களின் ஆதரவுடன் செயற்படடு வருகின்றார்கள். இந்த விபரங்கள் எல்லாம் அனைத்து ஊடக்களிலும் வெளியாகி இருந்தமை அனைவரும் அறிந்த விடயம்.
இவர்களின் அடுத்த ஆடுகளமாகவும் பிரச்சாரக்களமாகவும் தமிழ்த் திரையுலகம் குறி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் களமானது ராஜகச்சவின் ஆசீர்வாதத்துடனும் சில சினிமா அரசியற் பிரபலங்களின் பணத்தாசையுடனும் ஏற்கனவே தமிழ் சினிமாவின் களத்தில் காலூன்றி உள்ள ஜங்கரன் கருணாவின் வரவேற்புடனும் அல்லிராஜாவிற்குத் திறந்து விடப்பட்டுள்ளது. இவர்கள் விசிறி எறியும் காசிற்கு விஜயும், முருகதாசும் பலியானது போக அவர்களிற்கு வக்காளத்து வாங்க சீமானையும் திசை திருப்பி உள்ளது. லைக்கா குழுமத்தின் அத்தனை தமிழினத்துரோகங்களும் தெரிந்திருந்தும் வியாபாரமும் பணத்தாசையும் இவர்களைக் கோடம்பாக்கதினுள் காலூன்ற வழிவகுத்தது.
இதற்கான போராட்டங்கள், மாணவர்களின் எதிர்ப்பலைகள் என்பனவற்றை எல்லாம் புறந்தள்ளியும் பணத்தை அள்ளி வீசியும் தமிழினத்தின் துரோக நிறுவனங்காளின் கூட்டில் கத்தி தமிழினத்தின் கழுத்திற்குக் கத்தியாகவே வளர்ந்து வருகின்றது.
இதன் பாடல் வெளியீடு லண்டனில் வைப்பதாக லைக்ககாக் குழுவும் முடிவு செய்தது. ஆனால் இந்தத் தமிழினத் துரோகிகளின் கூட்டுச் சதிக்கான எதிர்ப்பு நெருப்புப் போலவே இங்கிருந்து கிளம்ப கத்தித் திரைப்படக்குழு திகைத்து நின்றுள்ளது. புலம் பெயர்தேசத்தின் எதிர்ப்பலைகள் இந்தத் திரைப்படத்தின் கடல் கடந்த உரிமையில் பெரும்பங்கை அழித்தொழித்து விட்டது. புலம்பெயர் தேசத்தில் இந்தத் திரைப்படத்தை வாங்கி வெளியிடும் துணிவு யாருக்கும் இருக்கப் போவதில்லை. இதை மீறி யாரும் இங்கு வெளியிடவும் போவதில்லை.
இனித் தமிழக மாணவர்களின் கடும் எதிர்ப்புத் தழிழ் நாட்டில் பாடலோ படமோ வெளியிடுவதையும் மிகவும் அச்சத்துடனேயே லைக்கா குழுமத்தால் பின்தள்ளி வைக்க வைத்துள்ளது. அவர்களின் அச்சத்தைப் போக்கித் துரோகிகளிற்குத் துணைசெய்ய ஒரு பிரபல குடும்பம் களமிறங்கி உள்ளது.
பெரும் தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் சர்வதேசப் படக்குழுமம் இந்தியாவின் வட மாநிலத்தின் மாபெரும் செலவு மிக்க திரைப்படத் தாயரிப்புக்களை நடாத்திவரும் நிறுவனத்தின் ஆக்கபூர்வ மற்றும் திட்டமிடல் தலைவராக ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இது இந்தித் திரைப்படத்துறையில் உள்ள தனது நண்பர்களின் செல்வாக்கின் மூலம் ரஜினிகாந்த் வாங்கிக் கொடுத்த சந்தர்ப்பமாகவே இது கூறப்படுகின்றது.
இப்படிப் பதவி பெற்ற சௌந்தர்யா செய்த முதல் வேலையே தமது துரோகத்தனத்தால் பெரும் சிக்ககிலிற்குள் சிக்கி நிற்கும் கத்தி படத்தின் பாடல் உரிமத்தை ஈரோஸ் நிறுவனத்திடம் சிபாரிசு செய்து வாங்கியது தான். அதாவது தமிழினத்தின் இரத்தத்தில் தன்வயிறு வளர்க்கும் லைக்கா குழுமத்தின் சிக்கலை அவிழ்த்தது தான் சௌந்தர்யாவின் முதல் வேலையாக இருந்துள்ளது. இதனையும் தாண்டி கத்தி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவினை எந்த எதிர்ப்பு வந்தாலும் அதனை உடைத்தெறிந்து பிரம்மாண்ணடமாக நடத்தித்தருவதாக லைக்கா குழுமத்திற்கு சௌந்தர்யா உறுதி அளித்துள்ளார்.
இங்கு உடைத்தெறிவதாக அவர் உறுதியளித்திருப்பது தமிழக மாணவர்கள் அமைப்பின் நியாயமான போராட்டங்களையும் மாணவர்களையும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மாணவர்கள் மீது ஒரு தடவை தாக்குதலும் நடந்துள்ளது.
தமிழினற்கெதிராக அநீதிகள் எழும்போதெல்லாம் குமுறி எழுந்த சீமானின் குரலும் அடக்கப்பட்டு விட்டது. அல்லது தானாவே அடங்கி விட்டது. இனி மாணவர்களின் எதிர்ப்பலைகளைத் தான் அடக்கித் தருவதாகவும் தன் தந்தை ரஜினிகாந்தின் மூலம் இவர்களிடமிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தான் செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்களிற்காக எந்தவிதமான தியாகத்தையோ அல்லது எந்தவிதமான நன்மையையோ செய்யாத ரஜினியைத் “தலைவா” என்று தலைமேல் வைத்துக் கொண்டாடும் தமிழ் இளைஞர்களை அடித்து நொறுக்கித் தான் பாடல் வெளியீட்டு விழாவை நடாத்தித் தருவதாக சௌந்தர்யா கூறியிருப்பது, தமிழர்களின் இனப்படுகொலையில் பட்டுத் தெறித்த தமிழனின் இரத்த வெள்ளத்தில் ரஜினியும் கை நனைப்பதாகவே அமைகின்றது.
தன் கைகளில் தமிழர்களின் இரத்தம் அப்பிக்கொள்ள ரஜினிகாந்த் அனுமதிக்கப போகின்றாரா அல்லது அதனைத் தடுக்க முயற்சி எடுக்கப்போகின்றாரா என்பது அவர் கைகளில் தான் உள்ளது. ஏனெனில் தழிழர்களிற்கான எதிர்ப்பலைகள் நாளை ரஜினிகாந்தையும் புறக்கணிக்கவோ அல்லது எதிரத்து நிற்கவோ தயங்கிநிற்கப் போவதில்லை என்பதை ரஜினிகாந்தும் அவரது மகளும் விரைவாக உணர்ந்து கொள்வது நல்லது.
– சோழ கரிகாலன்
தமிழ் நாட்டுத் தமிழன் சினிமாவுக்கு அடிமை.இதனை நன்கு உணர்ந்து கொண்டுதான் சிங்களவன் அழகாக சூழ்ச்சி வலை பின்னுகின்றான்.சினிமாவை வைத்தே தமிழனின் தலை எழுத்தை மாற்றி எழுதி காட்டப் போகிறான் சிங்களவன்.தமிழ் நாட்டுத் தமிழனின் இளிச்சவாய்த் தனத்தால் ஐஸ்வர்யாவின் சபதம் நிச்சயம் நிறைவேறும்.தென்னிந்திய மாநிலங்களில் தமிழ் நாட்டுத் தமிழனுக்குதான் சினிமா மோகம் அதிகம்.இதை உணர்ந்து மிக அழகாக காயை நகர்த்துகிறான் ராஜபக்சே.
மிகவும் மட்டமானவன் தமிழன் [எல்லோரும் அல்ல] என்பது உலகறிந்த விஷயம். மராட்டியனும் [ரஜினி] நமது பட்டியலில் சேர்ந்துக் கொண்டானே?
மு.ப.கரிகலன் அவர்களுக்கும்… திரு சிங்கம் அவர்களுக்கும்… என் தயைகூர்ந்த வேண்டுகோள். திராவிடன்தான் இப்படிச் செய் என்று ராஜபக்சேவுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டான் என்று சேர்த்து பதிவிட்டிருந்தால் இங்கே பலரின் மனம் குளிரும்! அப்போ தமிழனுக்கு புத்தி எங்கே போச்சு என்றெல்லாம் நீங்கள் சிந்திக்கவும் கேட்கவும் கூடாது. கேட்டீர்களேயானால் நீங்கள் தமிழின துரோகியாக முத்திரைக் குத்தப்படுவீர்கள்! அடுத்தவன் நம்மை முட்டாளாக்கிவிட்டான் என்று சொல்லி அடுத்தவன்மீது பழிபோடுவதில் நம்ம கைகள் மகா கெட்டிக்காரர்கள் !
என்னவன்,தென்னவன்,எங்கள் மன்னவன்; அவனின்றி ஒரு அணுவும் அசையாது!
நாட்டில் தண்ணிர் பிரெச்சனை வந்த பொழுது ஓடி ஒழிந்த இந்த மனிதர் ? தமிழர் களை பற்றி சிந்திக்க நேரம் ஏது ? பணம் தான் இவர்களின் குறிக்கோள் . யாரும் அந்த மாமனிதர் எம் ஜி ஆர் ஆக முடியாது .
1960/1970-களில் ஈழத்தமிழர்கள் இந்நாட்டில் (மலேசியா) அரசாங்க மற்றும் தோட்டப்புறங்களில் உயர்பதவிகளிலும் இருந்தபொது, நம் தமிழர்களை மிகவும் தரம் தாழ்த்தி ஏளனமாக பேசுவது மட்டுமல்ல “நாங்கள் தமிழர்கள் அல்ல ; நாங்கள் ஜெயவர்த்தனா ஆட்கலாக்கும்” என்று உயர்பதவிகளிலும் இருந்த ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, முடிவெட்டும் தொழில் புரிந்த ஈழத்தமிழர்கள்கூட நம்மை பற்றி (தமிழர்களை) இந்நாட்டிலேயே கேவலமாக பேசியவர்கள், அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டையும்/தமிழ்மக்களையும் பற்றி எப்படி பேசியிருப்பார்கள் ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்.
இவையெல்லாம் உண்மையா ? இல்லையா ? என்று உங்கள் முன்னோர்களிடன் கேட்டு பாருங்கள்.
ஆகவே என்னை பொறுத்தவரை “ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமை வருத்தத்திற்குரியது ஆனால் கண்டனதிற்குரியதல்ல”.
ஈழத்தமிழர்கள் மற்ற தமிழர்களை மட்டமாக நினைத்ததும் பேசியதும் உண்மையே.அதை யாரும் மறுக்க முடியாது. என்னைப்பொருத்தவரையில் நாம் யாவரும் தமிழர்கள் . நம்மவர்கள் ஒற்றுமை இல்லாமலும் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்தும் கேவலப்படுத்தியும் செயல் படுவது நம்முடைய சாபக்கேடு — நாம் பழயதை பேசி காலம் தள்ளுவதை விட்டு விட்டு இனியாவது தமிழர்கள் என்ற எண்ணத்துடன் செயல் படுவோம். நல்லது செய்யாவிடிலும் கெடுதி செய்யக்கூடாது. எனினும் நான் MIC எட்டப்பன்களை சாடி இருக்கிறேன் என்பதும் உண்மை.
ஸ்ரீ நக்கல் நாரதர் அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அன்று பனங்கொட்டையன் தமிழக தமிழனை பார்த்து மிகவும் இழிவாக பேசுவார்கள். அங்கு சிங்களவன் அடிக்க தொடங்கியதும் நம்மை அண்ணன் என்றும் தம்பி என்றும் உறவு கொண்டாட தொடங்கினர். அதனால் இன்று நாம் பழிவாங்க முயலக்கூடாது. மகிழ்வாரோடு மகிழ்ந்து அழுவாரோடு அழுது எப்பொழுதும் எங்கேயும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து அனைவரும் எல்லா நலன்களும் பெற்று வாழ இறைவன் நம்மை அசீர்வதித்து வழிநடத்துவாராக.