ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 27வது கூட்டத்தொடரின் பக்க அமர்வான சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பில், இலங்கையின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது அவர்கள், தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், நில அபகரிப்பு, கடல் தொழில் ஆக்கிரமிப்பு, பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து ஆதாரங்களுடன் அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
அப்படி போடுங்கப்பா நம்ம அரசியல் வாதிகளா ! எவண்டா சொன்ன தமிழணுல நல்ல அலசியல் வாதி இல்லைன்னு ? இதோ இங்கே பாருங்கப்பா … பின்றிங்க போங்க… வாழ்த்துக்கள் !!
ஆகா,நாளும் சிங்களவனின் அடாவடித் தனமான செய்திகளைப் படித்து எரிச்சல் கொண்ட என் கண்கள் குளிர்சியாகிவிட்டது மேலே கண்ட காட்சிகளை பார்த்துவிட்டு.உலக ஐ.நா. சபைக்கு தமிழ் கலாசார பண்பாட்டு உடையோடு செல்லும் ஈழத் தமிழர்களே, உங்களை இரு கரம் கூப்பி வணங்குகின்றேன்.உங்களால்தான் தாய் தமிழும் தமிழ் கலாச்சாரமும் உலகம் முழுவதும் கொடி கட்டி பறக்கின்றது.கனடா நாட்டின் நாடாளுமன்றத்தில் கூட உங்கள் வம்சாவளியை சேர்ந்த ராதிகா என்ற தமிழ்ப் பெண் தாய் தமிழில் பேசி நமது தமிழின் தொன்மையை உலகுக்கு எடுத்துக் காட்டினார்.வாழ்த்துக்கள்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த உலக மன்றத்தில் சிங்களவனின் இனவாத முகத் திரையை கிழித்தெரியுங்கள்.