அமைச்சரவையில் உள்ள முஸ்லீம் அமைச்சர்களை புலனாய்வு பிரிவின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருமாறு பொதுபலசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது என முன்னரே நாம் செய்தியை வெளியிட்டு இருந்தோம். அந்த அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலான்தே விதானகே இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார். இலங்கையில் முஸ்லீம் தீவிரவாதம் உள்ளதாக தாங்கள் விடுத்துவரும் எச்சரிக்கை உண்மையாக மாறிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை முஸ்லீம்கள் உளவாளிகளாக பயன்படுத்தப்படுவது குறித்த இந்திய தகவல்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இலங்கையிலிருந்து செயற்படும் முஸ்லீம் தீவிரவாதிகள் இந்தியாவையும் தென்னாசியாவையும் பலவீனப்படுத்த முயல்கின்றனர் என்பதே உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்தியாவை திருப்த்திப்படுத்தும் நோக்கில், கோட்டபாய ராஜபக்ஷ , தனது புலனாய்வுப் பிரிவை முடுக்கிவிட்டுள்ளார் என்றும் அறியப்படுகிறது. இவர்கள் அமைச்சரவையில் உள்ள முஸ்லீம் அமைச்சர்களைக் கூட வேவுபார்பார்கள் என்று கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றது.
அது தவறில்லை.அந்த கண்காணிப்பு பணி இனிதே தொடரட்டும்.