இலங்கை விடயத்தில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியா தரப்பில் தவறுகள் இடம்பெற்று வந்தாக இந்திய முன்னாள் அரசியல்வாதி நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி இலங்கை விடயங்கள் தொடர்பில் சில கடுமையான முடிவுகளை எடுத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விடயங்களில் சில விடயங்களை தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்ட நட்வர்சிங், ஆரம்பத்தில் இருந்தே இலங்கை தொடர்பில் தவறான விடயங்கள் இடம்பெற்றன என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் புதுடில்லி கொள்கை ஒன்றை கொண்டிருக்க, முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமசந்திரன் இலங்கையின் வடக்கை தமிழகத்துடன் இணைக்கும் கொள்கையை கொண்டிருந்தார்.
இந்தநிலையில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெறலாம் என்ற அச்சத்திலேயே இந்தியாவின் உதவியை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன கோரினார் என்று நட்வர்சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்தியாவின் எந்த ஒரு தகவலையும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எப்போதும் முன்கூட்டியே அறிந்து கொள்பவராக இருந்தார்.
இந்தநிலையில் ராஜீவ் காந்தி சிறந்த மனிதர் என்று குறிப்பிட்ட நட்வர்சிங், அவர் வித்தியாசமானவர் என்றும் தாம் செய்த தவறுகளை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! தனி தமிழர் நாடு ஒன்றே உலக தமிழர் நலனையும் காக்கும்!