போர்குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளிப்போரின் நேர்மைத் தன்மை குறித்து உறுதி செய்ய வழியில்லை!– சிங்கள ஊடகம்

sri lanka war crimeபோர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிப்போரின் நேர்மைத் தன்மை குறித்து உறுதி செய்ய வழி கிடையாது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைக் குழுவின் இணைப்பாளர் சன்ட்ரா பேதாஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்படுகிறது.

சாட்சியமளிப்பவர்கள் இதய சுத்தியுடன் மெய்யாக சாட்சியளிக்கின்றார்களா அல்லது போலியான சாட்சியங்களை வழங்குகின்றார்களா என்பதனை அறிந்து கொள்ள வழியில்லை.

இலங்கை அதிகாரிகள் சிலருடன் மூன்று மணியத்தியாலம் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனை ஒப்புக்கொண்டுள்ளார்.

சாட்சியாளர்களின் இரகசிய தன்மையை பேண வேண்டியதனால், சாட்சியாளர்கள் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது.

போர் நடவடிக்கைகள் கிழக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது எனவும், இறுதிக் கட்ட போர் வடக்கில் இடம்பெற்றதாகவும் எனினும் விசாரணைக் குழு வடக்கு போர் பற்றி மட்டுமே விசாரணை நடத்தி வருவதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவிலியன்கள் காணாமல் காணாமல் போனதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டாகும்.

சன்டராவுடன் இலங்கை அதிகாரிகள் சந்திப்பு நடத்துவதனை தடுக்க சில புலி ஆதரவு தரப்பினர் முயற்சி மேற்கொண்ட போதும் இந்த முயற்சி தோல்வியடைந்ததாக திவயின சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது.

TAGS: