புலிகளுக்கு எதிராக 3000 முறைப்பாடுகள்

ltte_FLAGஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணைக் குழுவிடம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 3011 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இறுதிக்கட்ட போரின் போது சிறுவர்களை பலவந்தமாக இணைத்துக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பெற்றோரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட சிலருக்கு எதிராகவும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமது பிள்ளைகளை கடத்திச் சென்றதாக வட மாகாண சபை உறு;பினர் ஆனந்தி சசிதரனுக்கு எதிராகவும் 25 முறைப்பாடுகள் ஜெனீவாவில் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக போரின் போது காணாமல் போன 5034 முப்படையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாரின் பெற்றோரும் புலிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்ய ஆயத்தமாகி வருவதாக சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: