இலங்கை விரைவில் சீனாவின் காலனி நாடாக மாறிவிடும்!- திஸ்ஸ அத்தநாயக்க

thissa-attanayakeஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக விரைவில் இலங்கை சீனாவின் காலனி நாடாக மாறிவிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதான நிர்மாணிப்பு அபிவிருத்தித் திட்டங்களில் பல திட்டங்களை 99 வருடங்களுக்கு சீனாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்த பின்னர், அந்த நிலப்பரப்பில் அரைவாசிக்கும் மேற்பட்ட நிலப்பகுதித குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்கப்பட உள்ளதுடன் மீதமுள்ள பகுதி மற்றுமொரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவிடம் கடன் பெற்று நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை எதிர்காலத்தில் சீனாவுக்கு வழங்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசாங்கம் எடுத்து வரும் இந்த நடவடிக்கை இறுதியில் இலங்கை சீனாவின் காலனி நாடாக மாறுவதில் முடிவடையும் எனவும் அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

TAGS: