நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
சமாதானம் இலங்கைக்க்கு பல்வேறு வழிகளில் நன்மையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லவுரா டேவிஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
சமாதானம் பல்வேறு மேலதிக நன்மைகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை, ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் போன்ற துறைகளில் இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமாதானம் அனைத்து மக்களினதும் உரிமையாகும் எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முழு அளவில் மனித உரிமைகளை அனுபவிக்கவும் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்யவும் சமாதானம் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.