இந்தியா துணை நிற்கவேண்டும்!- பா.ஜ.க.தலைவர்களிடம் பொதுபலசேனா கோரிக்கை

pothu_bal_senaபெளத்த, இந்து மக்­களை அழிக்கும் இன­வாத செயற்­பா­டு­களை தடுத்து தமிழ், சிங்­கள மக்­களைப் பாது­காப்­பதில் நாம் அக்­கறை செலுத்­துவோம் இந்த விட­யங்­க­ளுக்கு இந்­தி­யாவும் எமக்கு துணை நிற்­க­வேண்டும் என்று பொது­ப­ல­சேனா அமைப்­பினர் பா.ஜ.க.வின் தலை­வர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

இலங்கை வந்­துள்ள பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செய­லாளர் முர­ளி­தர்ராவ், கட்­சியின் வெளிவி­வ­கார அழைப்­பாளர் விஜய் ஜொலி ஆகியோர் நேற்று பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர்
கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வி­னரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர்.

கிரு­லப்­ப­னையில் உள்ள பொது­ப­ல­சே­னாவின் அலு­வ­ல­கத்தில் இந்தச் சந்­திப்பு இடம்­பெற்­றது.

இச்­சந்­திப்­பின்­ போதே தமது செயற்­பாட்­டிற்கு இந்­தியா துணை நிற்­க­வேண்டும் என்று பொது­ப­ல­சேனா அமைப்­பினர் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

இந்தச் சந்­திப்புத் தொடர்பில் பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே கருத்து தெரி­விக்­கையில்,

பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், தேசிய அமைப்­பாளர் விதா­ரந்­த­தீய நந்­த­தேரர் ஆகியோர் மேற்­கொண்­டி­ருந்தோம்.

இந்­திய – இலங்கை உறவு முறை மிக நீண்ட கால­மாக உள்­ளது. அர­சி­ய­லுக்கு அப்பால் கலா­சார பொரு­ளா­தார ரீதி­யிலும் இரு நாடு­களும் நல்ல உற­வினை மேற்­கொண்டு வரு­கின்­றது.

அதேபோல் இந்து பெளத்த உறவு முறையும் மிக நல்ல நிலையில் நில­வு­கின்­றது. எனவே, இவற்­றினை மேலும் பலப்­ப­டுத்த வேண்டும்.

இலங்­கையில் தமிழ் மக்கள் சிங்­கள மக்­க­ளுடன் நல்ல உற­வினை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றனர். இது மேலும் பல­ம­டைய வேண்டும். அதேபோல் பௌத்த – இந்து தொடர்­பு­களும் நெருக்­க­மா­ன­வையே.

ஆகவே, தொடர்ந்தும் இந்­திய – இலங்கை உறவு முறை­யா­னது அர­சியல், கலா­சார மத அடிப்­ப­டையில் பல­ம­டைய வேண்டும்.

மேலும், தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்­கான தீர்­வு­களை பெற்­றுத்­த­ரு­வதில் பொது­பல சேனா துணை நிற்கும்.

அதேபோல் இலங்­கையில் பௌத்த தமிழ் மக்­களை அழிக்கும் இன­வாத செயற்­பா­டு­களை தடுத்து தமிழ் – சிங்­கள மக்­களை பாதுகாப்பதிலும் நாம் அக்கறை செலுத்துவோம்.

எனவே, இந்தியாவும் இவ்விடயங்களில் எமக்கு துணை நிற்க வேண்டும் எனவும் நாம் அவர்களிடம் எடுத்துரைத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுபல சேனாவின் தேசிய தலைவர் 28 ஆம் திகதி அறிமுகம் – ஞானசார தேரர்

பொதுபல சேனா அமைப்பு எதிர்வரும் 28 ஆம் திகதி நடத்தும் தேசிய மாநாட்டின் போது நாட்டுக்கு புதிய தேசிய தலைவரை அறிமுகம் செய்ய போவதாக அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பௌத்த கொள்கையினை அடிப்படையாக கொண்ட தேசிய தலைவர் ஒருவரை தேடுவது என்பது கடினமானது என்ற போதலும் பொதுபல சேனா அமைப்பிடம் அப்படியான தேசிய தலைவர் ஒருவர் இருப்பதாகவும் ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

TAGS: