தமிழ் தேசிய சபை ஒன்றை உருவாக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் இணங்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இடம்பெற் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து, இந்த தமிழ் தேசிய சபை உருவாக்கப்படவுள்ளது.
இதன் மூலம் ஜனநாயக ரீதியான வெற்றிகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று கருதுவதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அண்மையில் இந்தியா சென்றிருந்த போது, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து தரப்பையும் ஒன்றிணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சக்திமயப்படுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தி இருந்தார்.
அதன் அடிப்படையிலேயே இந்த தமிழ் தேசிய சபை உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மோடியின் அந்த ஆலோசனையை எடுத்து குப்பையில் போடுங்கள்.தமிழ் தேசிய சபை உருவாக்கப்பட்டால் ஈழ மக்களுக்கு சுய நிர்ணய உரிமை கிடைத்து விடுமா? தன் ஆட்சி காலத்தில் ஈழப் பிரச்னையில் இப்படியே காலத்தை ஓட்டிவிடலாம் என்பதே அந்த வடவனின் திட்டம் அது.