இலங்கைக்கான இந்திய உதவிகளை பெரிதாக பார்க்கப்படுவதில்லை! சீனாவுக்கே முன்னுரிமை!- இந்திய உயர்ஸ்தானிகர்

y_k_sinhaஇலங்கைக்கான இந்திய உதவிகள் உரிய முறையில் முக்கியத்துவம் பெறுவதில்லை என்று இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹாää இந்தியா,  இலங்கைக்கு பாரிய உதவிகளை செய்து வருகிறது. எனினும் அவை உரிய வகையில் பாராட்டப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் புகையிரத பாதையை பொறுத்தவரையில் இந்தியா பாரிய பொறுப்புடன் அதனை மேற்கொண்டு வருகிறது. எனினும் இந்தியாவின் அந்த செயற்பாடுகளை உள்ளுர் ஊடகங்கள் பெரிதுபடுத்தவில்லை என்றும் சிங்ஹா தெரிவித்தார்.

கிழக்கில் பாரிய தி;ட்டங்களை இந்தியா செய்கின்ற போதும் சீனாவின் பாத்திரத்துக்கே கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

இந்தநிலையில் இந்தியாவின் இலங்கைக்கான உதவிகளில் பெரும்பாலானவை அன்பளிப்புகள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா, இலங்கையுடன் 1998ம் மற்றும் 2000ம் ஆண்டுகளில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்துகொண்டது.

2012ல் தென்னாசியாவில் இலங்கை, இந்தியாவுக்கான பாரிய பங்காளியாக தொடர்ந்தது.

2009ம் ஆண்டு 2.03 பில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் இலங்கையுடன் இடம்பெற்றன.

2011ல், 2012ல் என்ற பல பில்லியன் டொலர்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பரிமாறப்பட்டன என்றும் சிங்ஹா குறிப்பிட்டார்.

TAGS: