இலங்கை ஜனாதிபதியின் பதிலில் திருப்தியில்லை: விஜய் ஜொலி

vijay_jolyவடமாகாண பிரதம செயலாளர் தொடர்பில் தாம் தொடுத்த வினாவுக்கு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழங்கிய பதில் தமக்கு திருப்தி தரவில்லை என்று பாரதீய ஜனதாக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான விஜய் ஜொலி தெரிவித்துள்ளார்

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பாரதீய ஜனதாக்கட்சியின் பொதுச்செயலாளர் முரளிதரராவ் மற்றும் ஜொலி ஆகியோர் நாட்டுக்கு திரும்பும் முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தனர்.

இதன்போது வடமாகாண பிரதம செயலாளரான தமது செயலாளர் தொடர்பில் அதிகாரம் இல்லாத போது வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் எவ்வாறு செயற்படுவார் என்று ஜொலி ஜனாதிபதியிடம் வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, செயலாளர் பல வருடங்களாக அந்த பதவியை வகித்து வருகிறார்.

இந்தநிலையில் அவர்கள் செயலாளரின் அதிகாரங்களை பகிர்ந்துக்கொள்ளலாம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத ஜொலி மாகாண செயலாளர், ஆளுநருக்கு கீழ் வருவதை ஏற்றுக்கொண்டாலும் அவர் மீது முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லையெனில் அவரின் பதவியில் அர்த்தமில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை முரளிதரராவும் ஜொலியும் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி இனப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வைக் காணவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்

TAGS: