இலங்கை வரும் சீன நீர்மூழ்கி கப்பல்கள்: வலுக்கும் சீனாவின் ஆதிக்கம்

china_ship_001சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் சில இலங்கைக்கு வரவுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீன ஜனாதிபதி ஷீ ஜிங்பிங் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த போது சீனாவின் டீசல் மற்றும் இலத்திரனியல் நீர்மூழ்கி கப்பல் கொழும்புக்கு வந்தது.

இது இந்து சமுத்திர பகுதிக்கு வந்த முதல் சீன நீர் மூழ்கி கப்பல் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜிங்பிங்கின் வருகையின் போது பணிக்குழுவுக்கு உதவும் நோக்கில் சோங்ஷிங் என்ற பாரிய நீர் மூழ்கி கப்பல், சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு துறைமுகத்திற்கு தெற்கு முனையத்திற்கு வருகை தந்தது.

இந்த நடவடிக்கையானது இந்திய பெருங்கடலில் சீனா தனது பலத்தை மேற்கொள்ள எடுத்த முதல் படியான செயற்பாடு என கருதப்படுகிறது.

இந்த கப்பல் சீனாவில் வடிவமைக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை நீர் மூழ்கி கப்பல் என கூறப்படுகிறது.

திசை அறியும் கருவி, வானொலி, ரேடார் எச்சரிக்கை பெறும் கட்டமைப்பு என்பன பொருத்தப்பட்ட முதல் சீன நீர்மூழ்கி கப்பல் இது என தெரியவருகிறது. அத்துடன் இதில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களும் உள்ளன.

இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி- இலங்கைக்கு வந்து சென்ற சீனாவின் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்

TAGS: