தமிழர்களின் பிரச்சினைகளை மிகப்பெரிய அளவில் வெளிக்கொண்டுவர, ஆவணப்படுத்தக் கூடிய அளிவிலே அந்த வாய்மொழி மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தற்போது நியூயோர்க் நகரில் நடைபெற்றுவரும் இம் மாநாட்டிற்கு, கஜேந்திரகுமார் செல்ல , சிங்களம் பெரும் தடைகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். தனையும் தாண்டியே அவர் அங்கே சென்று தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ளார். குறித்த அமர்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இது தொடர்பாக தெரிவிக்கையில்,
கடந்த மார்ச் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் விளக்க அறிக்கையின் தொடர்ச்சியாக இந்த அறிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழின அடையாளத்தை அழிக்கும் நோக்கத்தோடு, ஆட்சியமைத்த சிறிலங்கா அரசுகள் செயல்பட்டு இருக்கின்றன. அந்தவகையில் தமிழ் என்ற அடையாளத்தை அழிக்கும் நோக்கத்தோடு தான் செயற்பாடுகள் அமைந்திருந்தன என கூட்டிக்காட்டப்படவில்லை என அறிக்கையில் பதிவு செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துகள்!