மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலந்தமடு, பெரியமாதவனை ஆகிய பகுதிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று வெள்ளிக்கிழமை நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மயிலத்தமடு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரியமாதவனை ஆகிய பகுதிகள் கால்நடைகளில் மேச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்ட பகுதியாகும்.
இங்கு கடந்த 1970ம் ஆண்டு முற்பட்ட காலம் தொடக்கம் செங்கலடி, சித்தாண்டி, வந்தாறுமூலை, முறக்கொட்டாஞ்சேனை, கிரான், சந்திவெளி, கோரகல்லிமடு உட்பட்ட பல பகுதிகளை சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் இங்கு சென்று தமது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த 2011ம் ஆண்டு தொடக்கம் அதன் எல்லைப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில் 1200க்கு மேற்பட்ட சிங்கள குடும்பத்தினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ் கால்நடைக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் அத்துமீறி பிரவேசித்து பல ஆயிரக்கணக்கான நிலப்பரப்பில் தமது பயிர் செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
கால்நடைகள் அப்பகுதிக்கு செல்லும் போது அவற்றை வெட்டியும், கால்நடைகளினால் ஏற்பட்ட நஷ்டங்களுக்கு நஷ்ர ஈடு கேட்டும் பல வழிகளில் துன்புறுத்தி வருகின்றனர்.
இவ்விடயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் சிங்கள மக்களின் அத்துமீறிய குடியிருப்பை தடைசெய்து வெளியேற்றுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா ஆகியோர் மயிலந்தமடு, பெரியமாதவனை ஆகிய பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை சென்றதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையான மாந்தலையாறு எல்லை பகுதி மட்டும் சென்று பார்வையிட்டனர்.
அங்கு அத்துமீறி குடியிருப்பவர்களை நேரடியாக கண்காணித்தனர்.
அத்துடன் இவர்கள் தரை இராணுவ பொறுப்பதிகாரியை சந்தித்து அங்கு கால்நடைகளை வளர்க்கும் தமிழ் கால்நடை உரிமையாளர்கள் பாதுகாப்பு, அவர்களது கால்நடைகளின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினர்.
29ம் திகதி திங்கட்கிழமை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற உள்ள நிலையில் இவ்விஜயம் முக்கியமானதாக உள்ளது.
அத்துமீறி குடியிருக்கும் அம்பாறை மாவட்ட சிங்கள விவசாயிகள் சார்பாக வனபரிபாலன திணைக்களம் வழங்கு தொடர்வதாக கூறும் நிலையில் அங்கு 1200க்கு மேற்பட்ட அம்பாறை மாவட்ட சிங்கள குடும்பங்களின் அத்துமீறி குடியிருப்பை இதுவரை வெளியேற்றபடவில்லை.
பல ஆயிரக்கணக்கான வனபரிபாலன சபைக்குரிய காணிகள் அழிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் திடீர் விஜயத்தின் போது கால்நடைகளை வளர்க்கும் கால்நடை பண்ணையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வேளை இவ் மயிலத்தமடு, பெரியமாதவணை இரண்டும் கிரான் பிரதான வீதியில் இருந்து கிட்டத்தட்ட 46 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளதுடன் மாந்தலை ஆறு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை இவ்விரு பகுதிக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவுள்ளவேளை இத்தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரமுர்களின் விஜயம் நடைபெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர், பொதுச்செயலாளரை வரவேற்கும் நிகழ்வும்
இரா.சம்பந்தன் அவர்களை பாராட்டும் நிகழ்வும் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி நடாத்திய பாராட்டு நிகழ்வும், வரவேற்பு பெருவிழாவும், இன்று 27.09.2014 சனிக்கிழமை காலை 9.00 மணிக்குகல்லடி மணிக்கூட்டுக்கோபுரத்தில் இருந்து ஆரம்பமாகியதுடன் அதிதிகள் மலர்மாலை அணிவித்து துளசி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித்தலைவர் கி.சேயோன் தலமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராட்டு பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் எட்டாவது தலைவராக பணியாற்றி தானாகவே விலகிக்கொண்டவரும் த.தே.கூட்டமைப்பின் தன்னிகரற்ற தலைவராகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்தின் தலைவராகவும் இராஜதந்திர பணிகளை முன்னெடுக்கும் பெரும் தலைவர், இரா.சம்பந்தனிற்கு பொன்னாடைபோர்த்தி வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டு பாராட்டி தாயகத்தலைமகன் எனும் பட்டத்தினையும் வழங்கி கௌரவித்தனர்.
அதனைத்தொடர்ந்து வரவேற்பு பெற்றவர்கள் வரிசையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் பதவியினை ஏற்றிருக்கும் இனப்பற்றாளன் மாவை சேனாதிராசா புதிய செயலாளர் மண்ணின் மைந்தன் கி.துரைராஜசிங்கம் ஆகியோருக்கு மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி வரவேற்கப்பட்டார்கள்.
அதனைத்தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் அனைத்து நிகழ்வுகளும் ஆரம்பமாகின.
இந்நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், தமிழரசிக்கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளர் நாயகம் கி.துரைராஜசிங்கம், மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், ஈ.சரவணபவன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா ஆகியோர் அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.
முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சு வார்த்தைகளை தவிர்த்து கொள்ள வேண்டும் – அம்பாறை மாவட்ட த.தே.கூ உறுப்பினர்கள்
அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக கல்முனையில் த.தே.கூட்டமைப்பு தலைமைகள் முஸ்லிம் காங்கிரசுடன் பேசுவதனை தவிர்த்துக்கொள்ளல் வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அவர்களின் தலைமைகளுக்கு கடிதல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த கால அரசியலும், தற்கால அரசியலும் நன்கு அறிந்திருந்தும் எமது மாவட்டத்தில் உள்ள எவரது கருத்துக்களுக்கும் இடமளியாது தாங்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுப்பது பெரும் வேதனையைத்தருகின்றது.
அம்பாறையில் அதுவும் குறிப்பாக கல்முனையில் பேச்சு நடத்துவதனை தாங்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றோம் என த.தே.கூட்டமைப்பின் தலைமைக்கு அனைத்து அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றினை கையளித்து இருக்கின்றனர்.
இம்முடிவினை எடுத்ததற்கான காரணங்களை பின்வருமாறு பட்டியல்படுத்தி இருக்கின்றார்கள்.
கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு நேரடி எதிரியாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்தமை.,
மத்திய மற்றும் கிழக்கு மாகாணசபையின் ஊடாக வழங்கப்படும் வேலை வாய்ப்புக்களில் முற்றாக தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டமை.
கிழக்கு மாகாணசபை ஊடாக பகிர்ந்தளிக்கப்படும் அபிவிருத்தி விடயங்களில் தமிழர்பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றது.
கல்முனை மாநகரசபை. போத்துவில் பிரதேச சபை ஊடாக தமிழர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதிகள்.
கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட ஆட்டோ சங்கத்தின் பிரச்சனை.
வீதிகளுக்கு பெயர் மாற்றுவதற்கான பிரச்சனை
நில ஆக்கிரமிப்பு, கலாசார சீர்கேடுகள் போன்ற பிரச்சினைகள் அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவையாவற்றையும் அறிந்திருந்தும் இவர்களுடன் பேச்சு நடத்தியாகவேண்டுமா என ஒட்டு மொத்த த.தே.கூட்டமைப்பினரும் தலைமைகளுக்கு கடிதம் மூலம் தங்களது கையொப்பத்தினை இட்டு கையளித்திருப்பதாக அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.