வெற்றியை நோக்கி மகிந்த: புதிய திட்டத்தின் வெளிவராத பல தகவல்கள்

mahinda_un_001ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றும்போது அவரது முகத்தில் தெளிவில்லாத் தன்மை இம்முறை மாறியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இவ்வாறு லங்காசிறி வானொலியின் இந்த வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2006ல் வட- கிழக்குத் தமிழர்கள் தான் ஜனாதிபதித் தேர்தலில் தன்னை வெல்லவைத்தார்கள். அதே தமிழர்கள் தான் 2010ல் பொன்சேகாவை ஆதரித்துத் தன்னை தோல்வியடைய வைக்க முயன்றார்கள். எனவே பெரும்பான்மையினரின் வாக்குப் பலத்திலும் மற்றும் முஸ்லிம்களின் வாக்குப்பலத்திலும் தங்கியிருப்பதற்கு மகிந்த விரும்புகின்றார்.

ஐ.நா. பொதுக்கூட்டத் தொடரில் மகிந்தவின் பிரசன்னம், சந்திப்புக்கள் என்பவற்றைப் பார்க்கும் போது அவர் நிறையவே முன்னேறியிருக்கிறார். குறிப்பாக அவரது முகத்தில் இருக்கும் தெளிவில்லாத் தன்மை இந்த முறை மாறியிருந்தது.

முஸ்லிம்களின் வாக்குக்களைக் கவர்வதற்காக இஸ்ரேலை புறந்தள்ளி, பாலஸ்தீனிய ஆதரவு மற்றும் ஒரு மில்லியன் டொலர்கள் கையளிப்பு என்பவற்றோடு தனது வெற்றிக்காக அதி நவீன தொழில்நுட்பப் பாவனையை ஆரம்பித்துவிட்டார்.

யுத்தக் குற்ற விசாரணைக்கான ஒன்றுமே பிரச்சினையில்லை. மகிந்த மிகவும் பலத்துடன் இருக்கிறார்.

சகல நாட்டுத் தலைவர்களும் சந்திக்கிறார்கள் என்ற கருவை விதைப்பதற்காக இலங்கையில் உள்ள சகல படைமுகாம்களிலும் ஐ. நாவில் ராஜபச்ச ஆற்றிய உரை நேரடியாக ஒலிபரப்பப்பட்டது என்பது உள்ளிட்ட பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

TAGS: