கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்தார் மோடி: மஹிந்த தெரிவிப்பு

modi_mahinthaஇலங்கை அரசுடன் தாங்கள் பேச்சு நடத்துவதானால் இந்தியா விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்திருக்கிறார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா சென்றிருந்த போது இந்தியப் பிரதமரை சந்தித்துப் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்புக் குறித்து அமைச்சரவையில் உரையாற்றிய போதே மஹிந்த இவ்வாறு தெரிவித்தார்.  அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியப் பிரதமர், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்துமாறு மட்டுமே என்னிடம் தெரிவித்தார். அத்துடன் பேச்சுக்காக விசேட பிரதிநிதியை இந்தியா நியமிக்க வேண்டும் என்ற கூட்டமைப்பினரின் கோரிக்கையைத் தான் நிராகரித்திருந்தார் என்பதையும் மோடி எனக்குத் தெளிவுபடுத்தினார் என தெரிவித்தார்.

மேலும் இந்தியா ஒருபோதும் இலங்கைக்கு விரோதமாக செயற்படாது எனவும் மோடி தன்னிடம் உறுதியளித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

TAGS: