இன்றும் சாட்சியப்பதிவுகள் முடியும் வரை காத்திருந்த புலனாய்வுத்துறை!

காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி நாள் சாட்சியப்பதிவுகள் இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இன்று கலை முதல் மாலை வரை சாட்சியமளிக்கும் பகுதிகளில் பொலிஸ் , புலனாய்வுத்துறை மற்றும் இராணுவத்தினர் அதிகளவில் காணப்பட்டனர். சாட்சியப்பதிவுகள் முடியும் வரை வெளியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் காத்திருந்தனர் புலனாய்வுத்துறையினர்.

இராணுவத்தினரால் வற்புறுத்தி சில மக்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர்.

சிறீலங்கா புலனாய்வுத்துறையின்  பிரசன்னத்தினால்  அச்சத்துடனேயே மக்கள் சாட்சியமளித்தனர்.  கரைய்ச்சி பிரதேச செயலகத்தை சேர்ந்த ஸ்கந்தபுரம் கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட 35பேர் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 23பேர் வருகை தந்து தமது உறவுகள் காணாமல் போனமை தொடர்பில் சாட்சியங்களை முன் வைத்தனர்.

மேலும் 12 பேர் தங்களது உறவுகளையும் தேடித்தருமாறு ஆணைக்குழுவிற்கு புதிதாக விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 4 நாட்களாக நடைபெற்ற சாட்சியப்பதிவில் பூநகரி மற்றும் கரைய்ச்சிப்பிரதேச செயலகத்தை சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டு சாட்சியப்பதிவுகள் நடைபெற்றன.

சாட்சியமளித்த மக்கள்  இராணுவத்திடம் கையளித்து காணாமல் போனமை, கடற்படை பிடித்துச் சென்றது, வெள்ளைவானில் வந்தவர்கள் கடத்திச் சென்றனர் என்ற சாட்சியங்களை முன் வைத்தனர்.

TAGS: