இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை: அமெரிக்கா

jen_america_001இலங்கை தொடர்பிலான நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும்,  கொள்கைகளில் மாறப்போவதில்லையெனவும் அமெரிக்கா தெரிவித்துளள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் ப்சான்கி இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டு, அங்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியைச் சந்தித்து நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இலங்கை தொடர்பில் அமெரிக்கா கடைபிடிக்கும் கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அது நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக மாறியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்கா இதை மறுத்திருக்கிறது. நேற்று இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜென் ப்சான்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையில் முறுகலைத் தவிர்த்து, ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் அமெரிக்கா என்றும் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

TAGS: