சுறா தாக்குதலை அடுத்து இரு வெண்சுறாக்கள் கொலை குறித்து கண்டனம்

shark_624x351_reuters
‘சுறாக்களைக் கொல்வது சுறா தாக்குதல் சம்பவங்களைக் குறைக்காது’

 

ஆஸ்திரேலியாவில் கடலில் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட ஒருவரை சுறா ஒன்று தாக்கிய சம்பவத்தை அடுத்து இரண்டு பெரும் வெண் சுறாக்களை அதிகாரிகள் கொன்ற சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்கும் வன உயிர் பாதுகாப்பு அமைப்பான, ஹ்யூமேன் சொசைட்டி இண்டர்நேஷனல், இந்த சுறாக்களைக் கொல்வது என்பது எதிர்காலத்தில் இது போல நடக்கக்கூடிய தாக்குதல்களைக் குறைத்துவிடாது என்று கூறியது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் இந்த நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஒருவரை சுறா ஒன்று தாக்கியபோது அவர் தனது இரு கைகளின் சில பகுதிகளை இழந்துவிட்டார்.

சுறாக்களின் எண்ணிக்கையைக் குறைக்க அவைகளைக் கொல்வது என்ற சர்ச்சைக்குரிய திட்டத்தை மாநிலத்தின் சுற்றுச்சூழல் அதிகாரிகளிடமிருந்து வந்த ஆட்சேபணைகளை அடுத்து, மேற்கு ஆஸ்திரேலியா கடந்த மாதம் கைவிட்டது. -BBC