இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இத்தாலி வாழ் இலங்கை மக்களை சந்தித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புனித பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வமாக அழைக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த இத்தாலிக்கு விஜயம் செய்துள்ளார்.
சில நாடுகள் இலங்கையில் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய ஊக்கமளிப்பதே இந்த நாடுகளின் நோக்கமாகஅமைந்துள்ளது.
உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்து நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கை மக்கள் நாட்டுக்கு எதிரான போலிப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமது ஆட்சிக் காலத்திலேயே அதிகளவு தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் நாடு எவ்வளவு ஜனநாயகத்தை உடையது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உன் நாட்டு மக்களையே கொல்லும் உரிமை உனக்குக் கிடையாது என்பதை நீ அறியவேண்டும். நீ கொன்று குவிப்பாய்…. சர்வதேசம் விரலைச் சப்பிக்கொண்டு இருக்கவேண்டுமா? முட்டாள்!
விடுதலை புலிகள் தீவிரவாதிகள் என்று சர்வதேசத்தை நம்பவைத்து ,இனஅழிப்பு செய்த பொழுது சர்வதேசம் இனித்ததே ,இன்று ஈழமக்களின் நிலைகண்டு ,சர்வதேசத்தின் நிலைப்பாடுகள் மாறும் பொழுது சர்வதேசம் கசக்கின்றதே , இனவாதிகள், என்றுமே இனவாதிகள் தான் ,சர்வதேசத்தின் பார்வை ,ஈழத்தின் விடுதலை சாசனமாக மாறட்டும் ,முன்னேறுவோம் ஈழ விடுதலையை நோக்கி , [ மலரட்டும் தமிழ் ஈழம் ] .
பன்னாடை பயலே, 9 நாடுகள் கொண்டு எம் இனத்தை கொன்று குவித்த நீ பன்னாடு தேசத்தை மிரட்டுகிறாயா ? உனக்கு தூக்கு மிக அருகில் மறந்துவிடாதே !
வருவாண்டா பிரபாகரன் மாவீரன் உன் கதையை முடிக்க