மட்டக்களப்பு எல்லைப்புறக் கிராமத்தில் இராணுவ ஆக்கிரமிப்பும் திட்டமிட்ட குடியேற்றங்களும்

ariyanethiranமட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் எல்லைப்புற கிராமங்களில் இராணுவ ஆக்கிரமிப்பும் திட்டமிட்ட குடியேற்றங்களும் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பட்டிப்பலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமங்களில் இந்த நிலைமை அதிகமாக காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அண்மையில் தாம் அந்த பிரதேசத்துக்கு விஜயம் செய்ததாகவும், இதன் போது அங்குள்ள மக்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுகின்றமை மற்றும் சிங்கள குடுயேற்றம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை தம்மிடம் முன்வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்த பின்னர், சிறிலங்காவின் இராணுவத்தினரும் அரசாங்கமும் இணைந்து மட்டக்களப்பில் எல்லைப் பகுதியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றி, சிங்களவர்களை குடியேற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

TAGS: