தமிழக முதல்வரின் சிறையடைப்பை அடுத்து தமிழர்கள் சுயாதீன வழியை தெரிவுசெய்ய வேண்டியுள்ளனர்!- கஜேந்திரகுமார்

gajendrgumarதமிழக முதல்வரின் சிறைத்தண்டனையால் இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலோ, தமிழகத்தின் நிலைப்பாட்டிலோ மாற்றங்கள் நிகழாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கத்தை பொறுத்தவரை,  அது தமிழர் நலன் என்ற ரீதியில் மாத்திரமல்லாமல் பிராந்திய நலனிலேயே அதிக அக்கறையை வெளிப்படுத்தும்.

எனினும் தமிழகத்தை பொறுத்தவரை அது, இலங்கைத் தமிழர்களின் நலனில் முதன்மை அக்கறையை செலுத்தும்.

இந்தநிலையில் ஜெயலலிதாவின் கைது காரணமாக தமிழகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது.

அதேநேரம் ஜெயலலிதாவின் சிறைத் தண்டனையானது,  தமிழகத்தின் கட்சிகள் இலங்கை விடயத்தில் தனித்த முடிவு ஒன்றை எடுக்க வேண்டிய முக்கிய செய்தியை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.

TAGS: