ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உட்பட்ட ஐக்கிய நாடுகள் சபைக்கு, இலங்கை விசுவாசமாக செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் கேட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குழுவினரை நியூயோர்க்கில் வைத்து சந்தித்த போது மூன் இதனை வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனை இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் எதிர்ப்பை காட்டி வருகிறது.
இந்த நிலையில் குறித்த விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பான் கீ மூன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.
இதேவேளை மதத்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து மூன் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில் பான் கீ மூனுடனான சந்திப்பு தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலில், போருக்கு பின்னர் இலங்கையின் நிலவரம் குறித்து கலந்துரையாடியதாக மாத்திரம் குறிப்பிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
பான் (நக்கி) மூன் இலங்கையில் ஆயிரமாயிரம் மக்கள் கொன்று குவிக்கையில் அப்பொழுது ஐகிய நாடுகளின் தலைமை செயலாளர் என்ற உயர் பதவியில் இருந்துவரும் மயிராண்டி, உன்னுடைய விசுவாசம் எங்கடா போச்சி? நீ இன்னொரு கொலைகாரனுக்கு விசுவாசம் குறித்து புத்தி சொல்கிறாய் ?கேனப்பய மவனே !!!
இவனைப்போன்றவன்கள் யாரையும் நம்ப முடியாது தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பான்கள். வெறும் பேச்சோடு நல்ல வசதியுடன் அலுங்காமல் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கும் போது ஏன் வெறுமனே அலட்டிக்கொள்ள வேண்டும்? எத்தனையோ நாடுகளில் எத்தனையோ அநியாயங்கள் நடந்தன ஆனால் வாயையும் அதையும் பொத்திக்கொண்டு இருந்து விட்டு நேரத்திற்கு நேரம் பேச்சை மாற்றி மாற்றி பேசினால் அதுவே ஐநாவின் தலைவனின் கடமையாகிவிடும்.