இலங்கை சந்தேக நபரை நாடு கடத்துவது தொடர்பில் இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் அமைந்துள்ள அமெரிக்க, இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமொன்றை முன்னெடுத்ததாக இலங்கையரான சுலைமான் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுலைமான் என்ற இலங்கையரை மலேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணைகளுக்காக சுலைமானை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோரியுள்ளது.
சந்தேக நபர்களை நாடு கடத்திக்கொள்வது தொடர்பில் கடந்த 2012ம்ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எனினும், இலங்கைப் பிரஜை ஒருவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக மலேசியா அறிவித்துள்ளது.
இலங்கையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், விசாரணைகளுக்காக குறித்த இலங்கையரை ஒப்படைக்குமாறு இந்தியா கோரி வருகின்றது.
சரி.இந்தியாவிடம் ஒப்படைக்க முடியவில்லை என்றால் இலங்கையிடம் ஒப்படைத்து விட வேண்டியதுதானே.பிறகு அந்த சந்தேக நபரை இலங்கையிடமிருந்து இந்தியா பெற்றுக்கொள்ளட்டுமே.