வடக்கில் வசந்தம்! அரசாங்கம் சிங்கள மக்களை உதாசீனம் செய்துள்ளது!– சம்பிக்க ரணவக்க

sampikka_003வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்திய அரசாங்கம் சிங்கள மக்களை உதாசீனம் செய்துள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு 7 தேசிய நூலக சேவை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற “இடம்பெயர் வடக்கு கிழக்கு சிங்களவர் ஒன்றியம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் வசந்தத்தையும் கிழக்கில் உதயத்தையும் ஏற்படுத்திய அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் சிங்கள மக்களை இருட்டில் வைத்து விட்டது.

சிங்கள இனத்தை மிதித்து புலியின் தோளில் ஏறி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.

வடக்கு கிழக்கில் முதலில் குடியிருப்புக்களை சிங்கள மக்களே உருவாக்கினார்கள்.

அவர்கள் விரட்டியக்கப்பட்டனர். அதன் பின்னர் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட அரசாங்கங்கள் சிங்கள மக்களை உதாசீனம் செய்து வருகின்றனர்.

சிங்கள இராணுவத்தினர் வென்றெடுத்து பெற்றுக்கொடுத்த வெற்றியை மீளவும் வென்றெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களை அமைச்சர் சம்பிக்க வெளியிட்டு வருகின்றமை கவனிக்கப்பட வேண்டியது.

தேர்தல் காலத்தில் அரசாங்கத்திற்கு பாதக நிலைமையை ஏற்படுத்தக் கூடிய வகையிலான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

TAGS: