ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் மேற்கொள்ளும் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு தமது அரசாங்கம் உறுதியான ஆதரவை தருவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் உதவி வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹுகோ ஸ்வைரி இந்த உறுதிமொழியை நேற்று தம்மை சந்தித்த புலம்பெயர் தமிழர்களிடம் அளித்துள்ளார்.
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலக தமிழர் பேரவையும் மற்றும் சில தமிழ் அமைப்புக்களும் இணைந்து நேற்று ஸ்வைரியை சந்தித்தன.
இதன்போது இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த ஸ்வைரி இலங்கையின் இறுதி சமாதானத்துக்காக தமது நாடு பாடுபடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

























