தமிழர்களின் பிரச்சினைகள் பிரதான கட்சிகள் முன்வைக்கின்ற தீர்வுகளைப் பொறுத்தே ஆதரவு வழங்கப்படும் – சுரேஷ்

suresh-10எதிர்வரும் தேசிய தேர்தல் ஒன்றில் எந்த கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிப்பதற்கு, பிரதான கட்சிகள் தமிழ் மக்களுக்காக முன்வைக்கப்படுகின்ற தீர்வுத் திட்டங்கள் குறித்து ஒப்பு நோக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சிறிலங்காவில் எந்த கட்சி ஆட்சி ஏறினாலும் அது தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் என்று நம்ப முடியாது.

ஆனால் சில மாற்றங்கள் ஏற்படலாம்.

எனவே அந்த கட்சிகள் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்வைக்கின்ற தீர்வுகளை முழுமையாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையிலேயே எந்த கட்சிக்கு ஆதரவளிக்கலாம் என்று தீர்மானிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

TAGS: