புலி ஆதரவு அரசியல்வாதிகளினால் வடக்கு மக்களுக்கு தடை

tna_logoதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் அரசியல்வாதிகளினால் வடக்கு மக்களுக்கு தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடாது என கோரியுள்ளனர்.

யாழ்தேவி ரயில் பாதை அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.

வடக்கில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம் என புலிகளுக்கு ஆதரவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் சிலர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்க உள்ள ரயில் பாதை அங்குரார்ப்பணம் உள்ளிட்ட நிகழ்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது.

ரயில் பாதையில் 285 புலிகளின் மாவீரர் குடும்பங்கள் தங்கியிருந்தனர் என பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கில் தமிழர்கள் ஆட்சி செய்யக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டும் எனவும், அதுவே தமது நோக்கம் எனவும், சுவிட்சர்லாந்தில் புலம்பெயர் தமிழர்களிடம் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார் எனவும், அதன் பின்னர் ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தை நிராகரிக்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: