13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட மாட்டாது – ரணில்

13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றின் கீழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களின் போது 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டம் சாத்திமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதனை எவ்வாறு அமுல்படுத்துவது என்பது குறித்து எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது வேட்பாளர் ஒருவர் தொடர்பில் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் மத அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை ரத்து செய்யும் எனவும், சுயாதீனமான நீதிமன்ற, காவல்துறை, தேர்தல் ஆணைக்குழுக்கள் உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Mahinda Ranil_CI

TAGS: