இலங்கையரை நாடுகடத்த மலேசிய அரசாங்கம் தீர்மானம்

malaysian-police-arrest-ltteமலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையரை  இன்று நாடுகடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அல்கெய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் மொஹமட் ஹுசைன் என்ற நபரே இவ்வாறு நாடுகடத்தப்படவுள்ளார்.

தமிழ் நாட்டிலுள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடாத்த முயற்சித்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய அரசாங்கம் இவரை தன்னிடம் ஒப்படைக்குமாறு மலேசியாவிடம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது.

இருப்பினும், அக்கோரிக்கையைப் புறக்கணித்த மலேசிய அரசாங்கம் இவரை இலங்கைக்கு நாடுகடத்த தீர்மானித்துள்ளது.

இலங்கைப் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடன் அழைத்துவரப்படும் இவரை விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் பொறுப்பேற்கவுள்ளனர்.

மொஹமட் ஹுசைனை மீட்பதற்கு மலேசிய மனித உரிமைகள் அமைப்பொன்று முன்னெடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச புலனாய்வுத் தகவல்களின் படி ஹுசைன் என்பவர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையரை இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை

TAGS: