வடக்கில் இராணுவ முகாம் அமைப்பதற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை முதலமைச்சர் நிராகரித்தார்

vikneswaran_4வட மாகாணத்தில் இராணுவ முகாம்கள் அமைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். இவ்வாறு திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கில் 25 இராணுவ முகாம்களை புதிதாக அமைப்பதற்காக விண்ணப்பட்டுள்ளது.

எனினும்ää இந்த விண்ணப்பங்களை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முகாம்கள் அமைக்கப்படவிருந்ததாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவான தேவைகளுக்காக கட்டடங்களை அமைக்க அனுமதி வழங்கப்படுமே தவிர, இராணுவ முகாம்களை அமைக்க அனுமதிக்க முடியாது என முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளதாக திவயின பத்திரிகை

செய்தி வெளியிட்டுள்ளது.

முகாம்களை அதிகரிக்கும் நோக்கில் அண்மையில் இந்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணசபையில் முதலமைச்சரின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டிருப்பதனால், முதலமைச்சரின் அனுமதியின்றி கூட முகாம்களை அமைக்கக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, வடக்கில் அதிகளவில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் படையினரின் நடவடிக்கைகளினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இராணுவத்தினரை நிலைநிறுத்த வேண்டியிருப்பதுடன்,  இராணுவ முகாம்களை அமைக்கவும் வேண்டியிருப்பதாக அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.

TAGS: