தீர்ப்பு வெளியாகி 2 மணி நேரத்தில் கொழும்பில் கூடிய சிங்கள முதலைகள் !

ltte_logoவிடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறி, அவ்வியக்கத்தை 2006ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்தது. இதனை எதிர்த்து ஆரம்ப கட்ட வழக்கு ஒன்று தொடரப்பட்டது. பிரபல வழக்கறிஞர் விக்டர் ஹாப் இதில் வாதிட்டு வந்தார். இன் நிலையில் ஐரோப்பிய நீதிமன்றம் நேற்றைய தினம்(16) புலிகள் மீதுள்ள தடையை சற்று தளர்த்தியுள்ளது. சரியாக ஆராயமல் ஐரோப்பிய ஒன்றியம் இன்ரர் நெட்டில் வெளியன தகவலை அடிப்படையாகக் கொண்டு புலிகளை தடைசெய்து விட்டது என்று நீதிபதிகள் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் இவ்வாறு ஒரு அதிரடி முடிவை எட்டியுள்ளார்கள் என்று கூறலாம். இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியது கொழும்பில் உள்ள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோட்டபாய ராஜபக்ஷவின் செயலாளர் பல அமைச்சர்களை தொடர்புகொண்டு, ரகசியமாக சந்திக்கும்படி கூறியுள்ளார். குறித்த வழக்கு தொடர்பாக தாம் கவலையடைவதாகவும் ஆனால் கரிசனையாக உள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளார்கள். வழக்கின் தீர்ப்பை எதிர்க முடியுமா ? அப்படி என்றால் அதற்கு என்ன செய்யவேண்டும் ? எந்த ஐரோப்பிய நாடு அதனை செய்யவல்லது ? என்று அனைத்து வழிகளிலும் ஆராய்ந்துள்ளார்கள். புலிகள் இன்னும் ஆயுதங்களுடன் இருக்கிறார்கள். அவர்கள் சிங்கள இராணுவத்தை தாக்குகிறார்கள் என்று காண்பிக்க அநியாயமாக மூவரை சிங்கள இராணுவம் சுட்டுக்கொன்றது. மூவரையும் பதவியா காட்டில் வைத்து தாம் சுட்டதாக இராணுவம் அறிவித்தது.

இவை அனைத்துமே நடைபெறக் காரணம், புலிகள் இன்னும் ஆயுதங்களோடு இருக்கின்றார்கள் என்று மேற்கு உலகத்திற்கு காட்டவே. ஆனால் இலங்கை அரசின் இந்த பாச்சா இறுதியில் பலிக்கவில்லை. இதனை நம்ப மேற்கு உலகங்கள் தயாராகவும் இல்லை. இறுதியில் தமிழர்களுக்கு சார்பான தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதனூடாக கொடி பிடிக்க கூடாது என்று கூச்சல் போட்ட பலர் வாயடைத்துப் போய் உள்ளார்கள். புலிகள் ஆதரவாளர்கள் என்று சொன்னால் பொலிசார் கைதுசெய்வார்கள் என்று மிரட்டியவர்களும் பெட்டிப்பாம்பாக அடங்கிவிட்டார்கள். பிரித்தானியா போன்ற நாடுகளில் இனி பொதுவாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டும். வட்டுக்கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு போல புலிகள் தடை தேவையா ? தேவையில்லையா என்று தமிழர்கள் வாக்களிக்கவேண்டும்.

வாக்கின் முடிவினை நாம் பிரித்தானிய அரசிடம் சமர்பிக்கவேண்டும். 2015ல் நடைபெறவுள்ள பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கான வாக்கெடுப்பில், தமிழர்கள் வாக்குகள் உங்களுக்கு தேவை என்றால், தமிழர்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றவேண்டும் என்று நாம் பலமான குரலில் எடுத்துச் சொன்னால், பிரித்தானிய அரசு கேட்டுத்தான் ஆகவேண்டும். இதனூடாக விடுதலைக்கான செயல்பாட்டை நாம் அதிகரிக்க முடியும். இதனை எந்த அமைப்பு முன் நின்று செயல்படுத்தப்போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வி ஆகும்.

TAGS: