சட்ட முன்வடிவுகளைக் கொண்டுவந்து அவற்றை நிறைவேற்றுமுன்னர் அவை பற்றிப் பொதுமக்களின் கருத்தைத் தெரிந்துகொள்வது முக்கியம். அதற்கேற்ப நாடாளுமன்றத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று முன்னாள் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா முன்மொழிந்திருக்கிறார்.
புதிதாகக் கொண்டுவரப்படும் சட்டங்கள் பற்றியோ திருத்தங்கள் பற்றியோ எம்பிகளுக்கு, பிஎன் கட்சியினர் உள்பட, விளக்கம் அளிக்கப்படுவதில்லை.
“எடுத்துக்காட்டுக்கு 1950, சாட்சிய சட்டத்தின் பகுதி 114ஏ-க்குத் திருத்தங்கள் மொண்டுவரப்படப்போவது எங்களுக்குத் தெரியாது”, என முன்னாள் தெமர்லோ எம்பி-ஆன அவர் தெரிவித்தார்.
“மறுநாள் காலையில் பக்கத்தான் எம்பிகள் அது பற்றிப் பேசியபோதுதான் அறிந்து கொண்டோம்”, என்றாரவர்.
எல்லாமே கமுக்கமாக செய்வதுதானே இந்த சமமில்லாத umnob-bn தராசு-மார்க் அரசின் தாரகமந்திரம். இருந்தும் உட்சிவெயில் பட்டப்பகல் நேரத்திலேயே சுருட்டோ2னு சுருட்டும் விசயம் சிறிதும் கசிந்துவிடாமல் இருக்க OSA-வை வேற இருக்கமா குரங்குபிடியில் வச்சிருக்காங்க. இதுல வேற உலகத்தர சனநாயகம் என்றக் கூப்பாடு. நீங்க இப்படியே மற்றவங்கபோல இல்லாம, மனசாட்சிபடி பேசிக்கொண்டு இருந்தீங்கனா umnob-ல இப்ப கொஞ்சம்2 உங்களுக்கு இருக்கிறதும் இல்லாது போயிடும். உங்கள் நேர்மை பாராட்டப்பட வேண்டியது..
நாடாளுமன்றட்டில் bn mic mca வை எட்டி உதைத்து வெளியே அனுப்புவதே சிறந்தது